Month: December 2020

Shuabul-Iman-8559

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8559. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நான் நபித்தோழர் ஒருவரிடம்,  ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவரை முத்தமிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்றார்.  அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டேன். அதற்கும் அவர் கூடாது என்றார். முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அனுமதி அளித்தார்.

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார் :

இது ஹன்ளலா அஸ்ஸதூஸி தனித்து அறிவிக்கும் செய்தி. இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

 


سَأَلْتُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَلْقَى الرَّجُلَ أَيُقَبِّلُهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: أَفَيَنْحَنِي لَهُ؟، قَالَ: ” لَا “. وَسُئِلَ عَنِ الْمُصَافَحَةِ فَرَخَّصَ فِيهَا.


Shuabul-Iman-8558

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8558. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்று அவர் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள்.


قِيلَ: يَا رَسُولَ اللهِ يَنْحَنِي أَحَدُنَا لِأَخِيهِ إِذَا لَقِيَهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: فَيَلْتَزِمُهُ؟ قَالَ: ” لَا


Musnad-Ahmad-13044

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13044. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

ஒருவர் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் நண்பனைச் சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டியணைத்து முத்தம் தரலாமா? என்று அவர்கள் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவருடையை கையைப் பிடித்து முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் அவர் விரும்பினால் (செய்யலாம்) என்றார்கள்.


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَحَدُنَا يَلْقَى صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا» . قَالَ: فَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لَا» . قَالَ: فَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ إِنْ شَاءَ»


Tirmidhi-2728

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2728. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை அல்லது தன் நண்பனைச் சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டியணைத்து முத்தம் தரலாமா? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவருடையை கையைப் பிடித்து முஸாஃபஹா (கைலாகு) செய்யலாமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் (செய்யலாம்) என்றார்கள்.


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ؟ قَالَ: «لَا»، قَالَ: أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لَا»، قَالَ: أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ»


Shuabul-Iman-3517

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா நாளில் கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


مَنِ اكْتَحَلَ بالْإِثْمَدِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَرْمَدْ أَبَدًا


Shuabul-Iman-3516

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3516. இப்ராஹீம் பின் முஹம்மது பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அவர்கள் அந்த வருடம் முழுவதும் விசாலமான செல்வசெழிப்பில் இருப்பார்கள் என்று (எங்கள் காலத்தில்) கூறப்பட்டது.


مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَزَالُوا فِي سَعَةٍ مِنْ رِزْقِهِمْ سَائِرَ سَنَتِهِمْ


Shuabul-Iman-3515

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3515. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ وَأَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ

 


Shuabul-Iman-3514

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3514. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ


Shuabul-Iman-3513

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3513. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ فِي سَائِرِ سَنَتِهِ


Shuabul-Iman-3512

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3512. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் நீண்ட வருடம் அவரின் குடும்பத்திற்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَى أَهْلِهِ طُولَ سَنَتِهِ


Next Page » « Previous Page