Month: February 2021

Musnad-Ahmad-11613

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11613. நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாராவது இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்ய மாட்டீர்களா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)


أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ»


Musnad-Ahmad-11408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11408. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.  அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)


أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصْحَابِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ؟» . فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَصَلَّى مَعَهُ


Abu-Dawood-574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 199

பள்ளியில் இரண்டாவது தடவை ஜமாஅத் நடத்துவது.

574. (பள்ளிக்குத் தாமதமாக வந்து) தனியாக (தொழும் – அல்லது தொழ நின்ற) மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)


أَبْصَرَ رَجُلًا يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ: أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ


Nasaayi-5042

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5042. அபூ பிஷ்ர் (ரஹ்) கூறியதாவது:

பத்து விஷயங்கள் நபிவழிகளில் அடங்கும். (அவையாவன:)

பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, வாய்கொப்புளித்தல், நாசிக்கு நீர் செலுத்துவது, தாடியை வளர்ப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது போன்றவைகளாகும் என தல்க் பின் ஹபீப் (ரஹ்) கூறினார்.

 

நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை, தல்க் பின் ஹபீபிடமிருந்து அபூபிஷ்ர், ஸுலைமான் அத்தைமீ போன்றோர் முர்ஸலாக அறிவித்துள்ளார்கள். இதுதான் சரியானது. தல்க் பின் ஹபீபிடமிருந்து முஸ்அப் பின் ஷைபா மர்ஃபூவாக அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளப்படாது. காரணம் அவர் (ஹதீஸ் கலையில்) நிராகரிக்கப்பட்டவர்.


عَشْرَةٌ مِنَ السُّنَّةِ: السِّوَاكُ، وَقَصُّ الشَّارِبِ، وَالْمَضْمَضَةُ، وَالِاسْتِنْشَاقُ، وَتَوْفِيرُ اللِّحْيَةِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَنَتْفُ الْإِبْطِ، وَالْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ وَغَسْلُ الدُّبُرِ


Nasaayi-5041

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5041. ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறியதாவது:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, நாசிக்கு நீர் செலுத்துவது போன்றவையாகும். மேலும் வாய்கொப்புளித்தல் இதில் அடங்குமா? என எனக்கு சந்தேகமாக உள்ளது என தல்க் பின் ஹபீப் (ரஹ்) கூறினார்.


عَشْرَةً مِنَ الْفِطْرَةِ: السِّوَاكَ، وَقَصَّ الشَّارِبِ، وَتَقْلِيمَ الْأَظْفَارِ، وَغَسْلَ الْبَرَاجِمِ، وَحَلْقَ الْعَانَةِ، وَالِاسْتِنْشَاقَ، وَأَنَا شَكَكْتُ فِي الْمَضْمَضَةِ


Ibn-Hibban-5475

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் வந்துள்ள கட்டளை.

5475. நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحَى»


Musnad-Ahmad-10338

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ


Musnad-Ahmad-9321

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ


Musnad-Ahmad-7813

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7813. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, விருத்தசேதனம் செய்துகொள்வது, மீசையைக் கத்தரிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الِاسْتِحْدَادُ، وَالْخِتَانُ، وَقَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ


Next Page » « Previous Page