Month: February 2021

Musnad-Ahmad-21712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21712. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ، عُصِمَ مِنَ الدَّجَّالِ»


Shuabul-Iman-2217

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2217. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினார்கள்.


كَانَ رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ وَعِنْدَهُ فَرَسٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدنو، وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهَا، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: ” تِلْكَ السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ


Shuabul-Iman-2218

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2218. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (தமது வீட்டில்) “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார்.  அவருக்கு அருகில் அவரின் வாகனப் பிராணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது.

அந்த மனிதர் (என்னவென்று) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டதை பார்த்து பயந்து விட்டார். இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்.


قَرَأَ رَجُلٌ سُورَةَ الْكَهْفِ وَلَهُ دَابَّةٌ مَرْبُوطَةٌ، فَجَعَلَتِ الدَّابَّةُ تَنْفِرُ، فَنَظَرَ الرَّجُلُ إِلَى سَحَابَةٍ قَدْ غَشِيَتْهُ أوْ ضَبَابَةٍ، فَفَزِعَ، فَذَهَبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: بَيْنَمَا ذَاكَ الرَّجُلُ يَقْرَأُ فَذَكَرَ لَهُ، فَقَالَ: ” اقْرَأْ فُلَانُ فَإِنَّ السَّكِينَةَ نَزَلَتْ لِلْقُرْآنِ أَوْ عِنْدَ الْقُرْآنِ


Abi-Yala-1722

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1722. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்க, “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார்.

உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்’ என்று கூறினார்கள்.


قَرَأَ رَجُلٌ الْكَهْفَ وَفِي الدَّارِ دَابَّةٌ فَجَعَلْتُ تَنْفِرُ فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ أَوْ سَحَابَةٌ قَدْ غَشِيَتْهُ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اقْرَأْ فُلَانُ، فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ عِنْدَ الْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»


Ibn-Hibban-769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

769. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (தமது வீட்டில்) “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தார். அவர் அருகில் வாகனப் பிராணி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. (தீடீரென) அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அவர் பார்க்கும் போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்.


إِنَّ رَجُلًا كَانَ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ وَدَابَّتُهُ مُوثَقَةٌ، فَجَعَلَتْ تَنْفِرُ، تَرَى مِثْلَ الضَّبَابَةِ أَوِ الْغَمَامَةِ قَدْ غَشِيَتْهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «اقْرَأْ يَا فُلَانُ، تِلْكَ السَّكِينَةُ أُنْزِلَتْ عِنْدَ الْقُرْآنِ، أَوْ لِلْقُرْآنِ»


Kubra-Nasaayi-11439

ஹதீஸின் தரம்: More Info

11439. பராஉ (ரலி) அறிவித்தார்

ஒருவர் ‘அல் கஹ்ஃப்’ எனும் (18 வது) அத்தியாயத்தை தம் இல்லத்தில் (அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் இரண்டு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதனை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு, அது குதிரையை மெல்ல மெல்ல நெருங்கலாயிற்று. அதனால், அவரின் குதிரை மிரளத் தொடங்கியது.

(அந்த மனிதர் கூறினார்: இதனால் நான் ஆச்சரியமடைந்தேன்)

விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதி தான் அது’ என்று கூறினார்கள்.


كَانَ رَجُلٌ يَقْرَأُ فِي دَارِهِ سُورَةَ الْكَهْفِ , وَإِلَى جَانِبِهِ حِصَانٌ مَرْبُوطٌ حَتَّى تَغَشَّتْهُ سَحَابَةٌ، فَجَعَلَتْ تَدْنُو وَتَدْنُو حَتَّى جَعَلَ الْفَرَسُ يَفِرُّ مِنْهَا، قَالَ الرَّجُلُ: فَعَجِبْتُ لِذَلِكَ، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَذَكَرَ لَهُ وَقَصَّ عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»


Tirmidhi-2885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2885. பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது)அத்தியாயத்தைத் (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் குதிரை மிரளுவதைப் பார்த்தார். அவர் என்னவென்று நாலாபுறமும் பார்க்கும்போது மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. (விடிந்தவுடன்) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது’ என்று கூறினார்கள்.


بَيْنَمَا رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الكَهْفِ إِذْ رَأَى دَابَّتَهُ تَرْكُضُ، فَنَظَرَ فَإِذَا مِثْلُ الغَمَامَةِ أَوِ السَّحَابَةِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ السَّكِينَةُ نَزَلَتْ مَعَ القُرْآنِ، أَوْ نَزَلَتْ عَلَى القُرْآنِ»


Musnad-Ahmad-18637

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18637. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:

நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன் ஓதி) தொழுதுக் கொண்டிருந்தார். அவரின் குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது. அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டு கொண்டிருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது’ என்று கூறினார்கள்.


بَيْنَمَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَفَرَسٌ لَهُ حِصَانٌ مَرْبُوطٌ فِي الدَّارِ، فَجَعَلَ يَنْفِرُ، فَخَرَجَ الرَّجُلُ، فَنَظَرَ، فَلَمْ يَرَ شَيْئًا، وَجَعَلَ يَنْفِرُ، فَلَمَّا أَصْبَحَ، ذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «تِلْكَ السَّكِينَةُ نَزَلَتْ بِالْقُرْآنِ»


Musnad-Ahmad-18591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18591. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது.

(அந்த மனிதர் கூறினார்: இதனால் நான் ஆச்சரியமடைந்தேன்)

விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினார்கள்…


كَانَ رَجُلٌ يَقْرَأُ فِي دَارِهِ سُورَةَ الْكَهْفِ وَإِلَى جَانِبِهِ حِصَانٌ لَهُ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ، حَتَّى غَشِيَتْهُ سَحَابَةٌ، فَجَعَلَتْ تَدْنُو وَتَدْنُو حَتَّى جَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهَا، قَالَ الرَّجُلُ: فَعَجِبْتُ لِذَلِكَ، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ وَقَصَّ عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»


Musnad-Ahmad-18509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18509. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அவரின் குதிரை அருகில் கட்டப்பட்டிருந்தது. உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. அந்த மனிதர் பயந்து விட்டார்.

இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்’ என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) கூறினார்:

நான் பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம் அந்த மனிதரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்று கேட்டேன். அதற்கு பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் “ஆம்” என விடையளித்தார்கள்…


قَرَأَ رَجُلٌ سُورَةَ الْكَهْفِ وَلَهُ دَابَّةٌ مَرْبُوطَةٌ، فَجَعَلَتِ الدَّابَّةُ تَنْفِرُ، فَنَظَرَ الرَّجُلُ إِلَى سَحَابَةٍ قَدْ غَشِيَتْهُ، أَوْ ضَبَابَةٍ، فَفَزِعَ، فَذَهَبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: سَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاكَ الرَّجُلَ؟ قَالَ: نَعَمْ. فَقَالَ: «اقْرَأْ فُلَانُ، فَإِنَّ السَّكِينَةَ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ عِنْدَ الْقُرْآنِ»


Next Page » « Previous Page