Month: February 2021

Shuabul-Iman-2220

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2220. யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி கொடுக்கப்படும் என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)

…..


مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ


Kubra-Bayhaqi-5996

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5996. ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

………


مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ فِي يَوْمِ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ


Hakim-8562

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8562. யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதினால், அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது, அவன் சாட்டப்படமாட்டான்-அல்லது அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)


مَنْ قَرَأَ سُورَةُ الْكَهْفَ كَمَا أُنْزِلَتْ، ثُمَّ خَرَجَ إِلَى الدَّجَّالِ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ – أَوْ: لَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ


Hakim-2072

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2072. அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

“யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும்.

யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான். (அதாவது தஜ்ஜாலின் தீங்கு ஏற்படாது)

யாரேனும் உளூ செய்தபின் “சுப்ஹானல்லாஹும்ம வபிஹம்திக லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃக்பிருக வ அதூபு இலைக” என்று ஓதினால் அது ஒரு ஏட்டில் எழுதப்பட்டு சீல்(முத்திரை)யிட்டுப் பாதுகாக்கப்படும். மறுமை நாள் வரை அதன் சீல் உடைக்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஹாகிம் இமாம் கூறுகிறார் :

இந்த செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ, அபூஹாஷிமிடமிருந்து அறிவிக்கும்போது அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கிறார். (பார்க்க ஹாகிம் ஹதீஸ் எண்-2073)


مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ، كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ مِنْ مَقَامِهِ إِلَى مَكَّةَ، وَمَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِهَا ثُمَّ خَرَجَ الدَّجَّالُ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ، وَمَنْ تَوَضَّأَ ثُمَّ قَالَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ كُتِبَ فِي رَقٍّ، ثُمَّ طُبِعَ بِطَابَعٍ فَلَمْ يُكْسَرْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ


Kubra-Nasaayi-10724

ஹதீஸின் தரம்: More Info

10724. “யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ, அவர் ஓதிய பின்னர் தஜ்ஜாலை அடைந்தால் அவன் அவர் மீது சாட்டப்படமாட்டான்-அல்லது அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது.

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும் என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)


«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ، ثُمَّ أَدْرَكَ الدَّجَّالَ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ، أَوْ لَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ، وَمَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَانَ لَهُ نُورًا مِنْ حَيْثُ قَرَأَهَا مَا بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ»


Kubra-Nasaayi-10723

ஹதீஸின் தரம்: More Info

10723. ஹதீஸ் எண்-10722 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் சிறிது மாற்றத்துடனும், அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது.


«مِنْ حَيْثُ يَقْرَؤُهُ إِلَى مَكَّةَ» وَقَالَ: «مَنْ قَرَأَ آخِرَ الْكَهْفِ»


Kubra-Nasaayi-10722

ஹதீஸின் தரம்: More Info

10722. அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

“யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிகிறாரோ அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ كَانَتْ لَهُ نُورًا مِنْ مَقَامِهِ إِلَى مَكَّةَ، وَمَنْ قَرَأَ بِعَشْرِ آيَاتٍ مِنْ آخِرِهَا فَخَرَجَ الدَّجَّالُ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ»


Almujam-Alawsat-1455

ஹதீஸின் தரம்: More Info

1455. யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவன், அவருக்கு தீங்கு செய்ய முடியாது.

யாரேனும் உளூ செய்தபின் “சுப்ஹானல்லாஹும்ம வபிஹம்திக லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃக்பிருக வ அதூபு இலைக” என்று ஓதினால் அது ஒரு ஏட்டில் எழுதப்பட்டு சீல்(முத்திரை)யிட்டுப் பாதுகாக்கப்படும். மறுமை நாள் வரை அதன் சீல் உடைக்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

…..


«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ مِنْ مَقَامِهِ إِلَى مَكَّةَ، وَمَنْ قَرَأَ بِعَشْرِ آيَاتٍ مِنْ آخِرِهَا، ثُمَّ خَرَجَ الدَّجَّالُ لَمْ يَضُرَّهُ، وَمَنْ تَوَضَّأَ، فَقَالَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، كُتِبَ فِي رَقٍّ، ثُمَّ جُعِلَتْ فِي طَابَعٍ، فَلَمْ يُكْسَرْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Darimi-3450

ஹதீஸின் தரம்: More Info

3450. யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி கொடுக்கப்படும் என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)


«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ لَيْلَةَ الْجُمُعَةِ، أَضَاءَ لَهُ مِنَ النُّورِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ»


Next Page » « Previous Page