Month: February 2021

Tirmidhi-481

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

தஸ்பீஹ் தொழுகை குறித்து வந்துள்ளவை.

481.உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். தொழுகையில் நான் ஓதுவதற்குச் சில வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! 10 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! 10 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! பின்னர் நீ விரும்பியதைக் (அல்லாஹ்விடம்) கேள்! அல்லாஹ், “சரி; சரி (நான் அதை விரைவில் நிறைவேற்றுகிறேன்) என்று கூறுவான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ أُمَّ سُلَيْمٍ غَدَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ : عَلِّمْنِي كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي صَلَاتِي، فَقَالَ : ” كَبِّرِي اللَّهَ عَشْرًا، وَسَبِّحِي اللَّهَ عَشْرًا، وَاحْمَدِيهِ عَشْرًا، ثُمَّ سَلِي مَا شِئْتِ، يَقُولُ : نَعَمْ نَعَمْ


Abu-Dawood-1297

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1297. நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, அப்பாஸே! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்குப் பத்து விஷயங்களை கற்றுக் கொடுக்கட்டுமா? அதைச் செய்தால், நீங்கள் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும், புதிய பாவங்களையும், பழைய பாவங்களையும், வேண்டுமென்றே செய்த பாவங்களையும், தவறுதலாகச் செய்த பாவங்களையும், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், இரகசியமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் இந்தப் பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நிலையில் இருக்கும் போது ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் என்று 15 தடவைகள் கூறுங்கள்.

பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவைகள் சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10 தடவைகள் அந்த தஸ்பீஹைக் கூறுங்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தாச் செய்த நிலையில்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ : ” يَا عَبَّاسُ، يَا عَمَّاهْ، أَلَا أُعْطِيكَ، أَلَا أَمْنَحُكَ، أَلَا أَحْبُوكَ ، أَلَا أَفْعَلُ بِكَ عَشْرَ خِصَالٍ إِذَا أَنْتَ فَعَلْتَ ذَلِكَ غَفَرَ اللَّهُ لَكَ ذَنْبَكَ ؛ أَوَّلَهُ وَآخِرَهُ، قَدِيمَهُ وَحَدِيثَهُ، خَطَأَهُ وَعَمْدَهُ، صَغِيرَهُ وَكَبِيرَهُ، سِرَّهُ وَعَلَانِيَتَهُ ؟ عَشْرَ خِصَالٍ : أَنْ تُصَلِّيَ أَرْبَعَ رَكَعَاتٍ، تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ فَاتِحَةَ الْكِتَابِ وَسُورَةً، فَإِذَا فَرَغْتَ مِنَ الْقِرَاءَةِ فِي أَوَّلِ رَكْعَةٍ وَأَنْتَ قَائِمٌ قُلْتَ : سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ خَمْسَ عَشْرَةَ مَرَّةً، ثُمَّ تَرْكَعُ فَتَقُولُهَا وَأَنْتَ رَاكِعٌ عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنَ الرُّكُوعِ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَهْوِي سَاجِدًا فَتَقُولُهَا وَأَنْتَ سَاجِدٌ عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنَ السُّجُودِ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ فَتَقُولُهَا عَشْرًا، فَذَلِكَ خَمْسٌ وَسَبْعُونَ، فِي كُلِّ رَكْعَةٍ تَفْعَلُ ذَلِكَ فِي أَرْبَعِ رَكَعَاتٍ، إِنِ اسْتَطَعْتَ أَنْ تُصَلِّيَهَا فِي كُلِّ يَوْمٍ مَرَّةً فَافْعَلْ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ جُمُعَةٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ شَهْرٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ سَنَةٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي عُمُرِكَ مَرَّةً


Tirmidhi-482

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

482. நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி, என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்! ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15 தடவைகள் கூறுங்கள்!

பின்னர் ருகூவு செய்து அதில் 10 தடவைகள் அதனைக் கூறுங்கள்! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவைகள் கூறுங்கள்! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவைகள் கூறுங்கள்!

பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10 தடவைகள் கூறுங்கள்! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் 10 தடவைகள் அதனைக் கூறுங்கள்! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவைகள் அதனைக் கூறுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள் வீதம் நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உங்களது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உங்களை

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «يَا عَمِّ أَلَا أَصِلُكَ، أَلَا أَحْبُوكَ، أَلَا أَنْفَعُكَ»، قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ” يَا عَمِّ، صَلِّ أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ بِفَاتِحَةِ الكِتَابِ وَسُورَةٍ، فَإِذَا انْقَضَتِ القِرَاءَةُ، فَقُلْ: اللَّهُ أَكْبَرُ، وَالحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، خَمْسَ عَشْرَةَ مَرَّةً قَبْلَ أَنْ تَرْكَعَ، ثُمَّ ارْكَعْ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ اسْجُدْ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ اسْجُدْ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا قَبْلَ أَنْ تَقُومَ، فَتِلْكَ خَمْسٌ وَسَبْعُونَ فِي كُلِّ رَكْعَةٍ وَهِيَ ثَلَاثُمِائَةٍ فِي أَرْبَعِ رَكَعَاتٍ، وَلَوْ كَانَتْ ذُنُوبُكَ مِثْلَ رَمْلِ عَالِجٍ غَفَرَهَا اللَّهُ لَكَ “، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَسْتَطِيعُ أَنْ يَقُولَهَا فِي يَوْمٍ، قَالَ: ” إِنْ لَمْ تَسْتَطِعْ أَنْ تَقُولَهَا فِي يَوْمٍ فَقُلْهَا فِي جُمْعَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ أَنْ تَقُولَهَا فِي جُمُعَةٍ فَقُلْهَا فِي شَهْرٍ، فَلَمْ يَزَلْ يَقُولُ لَهُ، حَتَّى قَالَ: فَقُلْهَا فِي سَنَةٍ


Musannaf-Abdur-Razzaq-5004

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5004. உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் பஹ்ரைன் நாட்டின் செல்வத்தை வழங்குவார்கள் என்று எண்ணினேன். நீ நான்கு ரக்அத்கள் தொழு! ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தையும், மற்றொரு அத்தியாயத்தையும் ஓது! பின்னர் அல்ஹம்து லில்லாஹ், வ ஸுப்ஹானல்லாஹ், வல்லாஹு அக்பர், வலாயிலாஹ இல்லல்லாஹு இதை 15 தடவைகள் கணக்கிட்டு (ஓதிக்) கொள்.

பின்னர் நீர் ருகூவு செய்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பிறகு தலையை உயர்த்தி நின்ற நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு!

பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! இவை மொத்தம் 75 தடவைகளாகும். இதைப் போன்று மீதமுள்ள மூன்று ரக்அத்திலும் செய். இவற்றின் மொத்தம் 300ஆகும். இந்த தஸ்பீஹை (1.அல்ஹம்து லில்லாஹ் 2.ஸுப்ஹானல்லாஹ் 3.அல்லாஹு அக்பர் 4.லாயிலாஹ இல்லல்லாஹு என்று நான்காக) பிரித்து எண்ணினால் மொத்தம் 1200 ஆகும்.

பாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு இருபது ஆயத்துகள் அல்லது அதை விட அதிகமாக ஓது! இத்தொழுகையை

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «أَلَا أَهَبُ لَكَ؟ أَلَا أَمْنَحُكَ؟ أَلَا أَحْذُوكَ؟ أَلَا أُوثِرُكَ؟ أَلَا؟ أَلَا؟» حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيَقْطَعُ لِي مَاءَ الْبَحْرَيْنِ قَالَ: ” تُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ أُمَّ الْقُرْآنِ فِي كُلِّ رَكْعَةٍ وَسُورَةً، ثُمَّ تَقُولُ: الْحَمْدُ لِلَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَعُدَّهَا وَاحِدَةً حَتَّى تعُدَّ خَمْسَ عَشْرَةَ مَرَّةً، ثُمَّ تَرْكَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ رَاكِعٌ، ثُمَّ تَرْفَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ رَافِعٌ، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ سَاجِدٌ، ثُمَّ تَرْفَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ جَالِسٌ، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ سَاجِدٌ، ثُمَّ تَرْفَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ جَالِسٌ، فَتِلَكَ خَمْسٌ وَسَبْعُونَ، وَفِي الثَّلَاثِ الْأَوَاخِرِ كَذَلِكَ، فَذَلِكَ ثَلَاثُ مِائَةِ مَجْمُوعَةٍ، وَإِذَا فَرَّقْتَهَا كَانَتْ أَلْفًا وَمِائَتَيْنِ ـ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يَقْرَأَ السُّورَةَ الَّتِي بَعْدَ أُمِّ الْقُرْآنِ عِشْرِينَ آيَةً فَصَاعِدًا ـ تَصْنَعُهُنَّ فِي يَوْمِكَ أَوْ لَيْلَتِكَ، أَوْ جَمْعَتِكَ، أَوْ فِي شَهْرٍ، أَوْ فِي سَنَةٍ، أَوْ فِي عُمْرِكَ، فَلَوْ كَانَتْ ذُنُوبُكَ عَدَدَ نُجُومِ السَّمَاءِ، أَوْ عَدَدَ الْقَطْرِ، أَوْ عَدَدَ رَمْلِ عَالِجٍ، أَوْ عَدَدَ أَيَّامِ الدَّهْرِ لَغَفَرَهَا اللَّهُ لَكَ


Kubra-Bayhaqi-4920

ஹதீஸின் தரம்: Pending

4920. உர்வா பின் ருவைம் கூறியதாவது:

அன்ஸாரியை சேர்ந்த ஒருவர் கூறினார்.

ஹதீஸ் எண்-4919 இல் மஹ்தீ பின் மைமூன் அறிவிக்கும் செய்தியைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் என்று வேறு அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِجَعْفَرٍ بِهَذَا الْحَدِيثِ فَذَكَرَ نَحْوَهُ، ثُمَّ قَالَ فِي السَّجْدَةِ الثَّانِيَةِ مِنَ الرَّكْعَةِ الْأُولَى كَمَا فِي حَدِيثِ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ


Kubra-Bayhaqi-4919

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4919. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன்; உனக்கு நன்மையைத் தருகிறேன்; உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன். (அப்போது) பகல் சாயும் போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு!

பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவைகள், அல்ஹம்து லில்லாஹ் 10 தடவைகள், அல்லாஹு அக்பர் 10 தடவைகள், லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவைகள் கூறாமல் எழாதே!

பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப் பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்தால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு பகலில் அல்லது இரவில் ஏதாவது ஒரு நேரத்தில் தொழுது கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ائْتِنِي غَدًا أَحْبُوكَ وَأُثِيبُكَ وَأُعْطِيكَ “، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ يُعْطِينِي عَطِيَّةً قَالَ: ” إِذَا زَالَ النَّهَارُ فَقُمْ فَصَلِّ أَرْبَعَ رَكَعَاتٍ “، فَذَكَرَ نَحْوَهُ. قَالَ: ” ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ، يَعْنِي مِنَ السَّجْدَةِ الثَّانِيَةِ، فَاسْتَوِ جَالِسًا وَلَا تَقُمْ حَتَّى تُسَبِّحَ عَشْرًا، وَتَحْمَدَ عَشْرًا، وَتُكَبِّرَ عَشْرًا، وَتُهَلِّلَ عَشْرًا، ثُمَّ تَصْنَعُ ذَلِكَ فِي الْأَرْبَعِ رَكَعَاتٍ “. قَالَ: ” فَإِنَّكَ لَوْ كُنْتَ أَعْظَمَ أَهْلِ الْأَرْضِ ذَنْبًا غُفِرَ لَكَ بِذَلِكَ “، قُلْتُ: فَإِنْ لَمْ أَسْتَطِعْ أَنْ أُصَلِّيَهَا تِلْكَ السَّاعَةَ؟ قَالَ: ” صَلِّهَا مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ


Almujam-Alawsat-7485

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7485. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரண்டு நற்குணங்களை (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! அவைகளை வழமையாக கடைப்பிடித்து வரும் எவரும் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார்.

அவைகள், ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் அல்லாஹு அக்பர் 10-தடவையும், ஸுப்ஹானல்லாஹ் 10-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும்,  அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும். (ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  “உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.

அப்போது நபித்தோழர்களில் சிலர், மேற்கண்ட நற்செயல்களை செய்வது எளிதான காரியம் தானே என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்

«خَلَّتَانِ هُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، لَا يُوَاظِبُ عَلَيْهِمَا أَحَدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ: فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرُ تَكْبِيرَاتٍ، وَعَشْرُ تَسْبِيحَاتٍ، وَعَشْرُ تَحْمِيدَاتٍ، فَهَذِهِ خَمْسُونَ وَمِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَذَاكَ مِائَةٌ عَلَى اللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يُذْنِبُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ ذَنْبٍ؟» فَقَالَ بَعْضُهُمْ: إِنَّ هَذَا أَمْرٌ الْعَمَلُ فِيهِ يَسِيرٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَأْتِي أَحَدَكُمْ إِذَا فَرَغَ مِنْ صَلَاتِهِ فَيَقُولُ: اذْكُرْ حَاجَةَ كَذَا وَحَاجَةَ كَذَا»


Almujam-Alawsat-6215

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6215. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரவிலும், பகலிலும் இரண்டு நற்குணங்களை  வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான அடியாரை, அல்லாஹ் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அவை ஒரு அடியார் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-தடவையும், அல்லாஹு அக்பர் 10-தடவையும், லாஇலாஹ இல்லல்லாஹ் 10-தடவையும் கூறுவதாகும். இவைகள் இரவிலும், பகலிலும் நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். ஆனால் அல்லாஹ்விடத்தில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இதை நாங்கள் ஏன் வழமையாக கடைப்பிடிக்க முடியாது? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றிய பிறகு ஷைத்தான் அவரிடம் வந்து அவரின் தேவைகளை நினைவூட்டுவான். எனவே அந்த தஸ்பீஹ்களை கூறுவதற்கு முன் அவர் எழுந்து விடுவார்.

“உங்களில்

«خَصْلَتَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّهَ، وَهُمَا يَسِيرَانِ، وَقَلِيلٌ مَنْ يُحَافِظُ عَلَيْهِمَا» ، قَالُوا: وَمَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَسْبِيحُ الْعَبْدِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُهَلِّلُ عَشْرًا، وَهِيَ خَمْسُونَ وَمِائَةٌ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ، وَهِيَ عِنْدَ اللَّهِ أَلْفٌ وَخَمْسُ مِائَةِ حَسَنَةٍ، وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ تَسْبِيحَةً، وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ تَحْمِيدَةً، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ تَكْبِيرَةً، فَذَلِكَ مِائَةٌ، وَهِيَ عِنْدَ اللَّهِ أَلْفُ حَسَنَةٍ، فَذَلِكَ أَلْفَانِ وَخَمْسُ مِائَةِ حَسَنَةٍ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا لَنَا لَا نُحَافِظُ عَلَى ذَلِكَ؟ قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَضَى صَلَاتَهُ أَتَاهُ الشَّيْطَانُ، فَذَكَّرَهُ حَوَائِجَهُ، فَيَقُومُ قَبْلَ أَنْ يَقُولَهَا، فَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ أَتَاهُ، فَأَلْهَاهُ عَنْهَا حَتَّى يَنَامَ»


Almujam-Alawsat-5608

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5608. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அதிக நன்மைகள் தரும்) நற்செயல்கள் அதிகம் உள்ளன. அதை செய்பவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«الْخَيْرُ كَثِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِ قَلِيلٌ»


Almujam-Alawsat-2953

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2953. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்கள் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதைச் செய்பவர்கள் குறைவானவர்களே!

(அவ்விரண்டில் முதல் நற்செயல்) நீ ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(அவ்விரண்டில் இரண்டாவது  நற்செயல்) நீ (தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் என்று 100-தடவை கூறுவதாகும். இவைகள் உனக்கு நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.


«خَصْلَتَانِ، أَوْ خَلَّتَانِ هُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ: الصَّلَوَاتُ الْخَمْسُ، تُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَتَحْمَدُهُ عَشْرًا، وَتُكَبِّرُهُ عَشْرًا، فَتِلْكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ، سَبَّحْتَ وَكَبَّرْتَ وَحَمَّدْتَ مِائَةَ مَرَّةٍ فَلَكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ»


Next Page » « Previous Page