Month: February 2021

Musannaf-Ibn-Abi-Shaybah-29264

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29264. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் மனிதர் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிமையானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முதல் நற்செயல்)  ஒரு மனிதர் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவில் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும், அல்லாஹு அக்பர் 34-தடவையும் கைவிரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்)

(இரண்டாவது  நற்செயல்) ஒரு மனிதர் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ்,

«خُلُقَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا رَجُلٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ، وَمَنْ يَفْعَلُهُمَا قَلِيلٌ»، قِيلَ: مَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، يُسَبِّحُ الرَّجُلُ فِي دُبُرِ كُلِّ صَلَاتِهِ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا، فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ»، قَالَ: وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُدُّهُنَّ فِي يَدِهِ وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ عِنْدَ مَضْجَعِهِ مِنَ اللَّيْلِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ وَحَمِدَ وَكَبَّرَ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يُذْنِبُ فِي اللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةٍ

Musannaf-Abdur-Razzaq-3189

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3189. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான மனிதர் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிமையானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முதல் நற்செயல்) நீங்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(இரண்டாவது  நற்செயல்) நீங்கள் படுக்கைக்கு செல்லும் போது (விரிப்பில்) அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், என்று நூறு தடவை கூறுவதாகும்.

இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும். (ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி

«خَصْلَتَانِ لَا يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ» قَالُوا: وَمَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «يُسَبِّحُ أَحَدُكُمْ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ، فَتِلْكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ كَبَّرَ اللَّهَ وَحَمِدَهُ وَسَبَّحَهُ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ؟» قَالَ: وَلَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُدُّ هَكَذَا، وَعَدَّ بِأَصَابِعِهِ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ لَا نُحْصِيهَا؟ قَالَ: ” يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ فِي صَلَاتِهِ فَيَقُولُ لَهُ: اذْكُرْ حَاجَةَ كَذَا وَحَاجَةَ كَذَا حَتَّى يَنْصَرِفَ وَلَمْ يَذْكُرْ، وَيَأْتِيهِ عِنْدَ مَنَامِهِ فَيُنَوِّمُهُ وَلَمْ يَذْكُرْ

Almujam-Alawsat-7035

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7035. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன்.

«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»

Hakim-2006

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2006. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன்.

«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»

Hakim-2005

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2005. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன்.

ஹாகிம் கூறுகிறார் :

இந்த செய்தியை அதாஉ பின் ஸாயிபிடமிருந்து அஃமஷும் அறிவித்துள்ளார்.

«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»

Almujam-Alawsat-8568

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8568. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.

«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»

Ibn-Hibban-843

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

843. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை(விரல்)களால் எண்ணுவதை பார்த்தேன்.

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ بِيَدِهِ»

Bazzar-2406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2406. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.

«رَأَيْتُ النَّبِيَّ يَعْقِدُ التَّسْبِيحَ»

Kubra-Bayhaqi-3368

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3368. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்வதை (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை) வலது கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன்.

அறிவிப்பாளர் முஹம்மது பின் குதாமாவின் அறிவிப்பில் வலதுகை (விரல்களால்) என்று இடம்பெற்றுள்ளது.

رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ

Kubra-Bayhaqi-3367

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3367. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.

رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ

Next Page » « Previous Page