Month: February 2021

Abi-Yala-1185

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1185. ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி “நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சார்ந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


تُصْبِحُ الْأَعْضَاءُ تُكَفِّرُ اللِّسَانَ تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا


Musnad-Ahmad-11908

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11908. ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி “நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சார்ந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ، فَإِنَّ أَعْضَاءَهُ تُكَفِّرُ لِلِّسَانِ، تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَأَنْ اعْوَجَجْتَ، اعْوَجَجْنَا


Tayalisi-2323

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2323. ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி “நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சார்ந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


الْأَعْضَاءُ تُكَفِّرُ اللِّسَانَ، تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا


Tirmidhi-2407

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2407. ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி “நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சார்ந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ، فَإِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنْ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا


Musnad-Ahmad-17997

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17997. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) கூறியதாவது:

யார் (தனது பிள்ளைகளுக்கு) சிறிதளவேனும் தங்க நகையை அணிவிக்கின்றாரோ அல்லது அணிந்துக் கொள்கிறாரோ அவருக்கு மறுமை நாளில் அந்த நகையால் சூடு போடப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ تَحَلَّى أَوْ حُلِّيَ بِخَر بَصِيصَةٍ مِنْ ذَهَبٍ، كُوِيَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ»


Almujam-Alkabir-410

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

410. ஹதீஸ் எண்-409 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

அதில் அஸ்மா பின்த் யஸீத் தனது சின்னம்மாவுடன் வந்தார்கள் எனவும், அவரின் சின்னம்மா தங்க காப்பு அணிந்திருந்தார் எனவும் வந்துள்ளது.


أَنَّهَا أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى خَالَتِهَا سِوَارَيْنِ فَذَكَرَ نَحْوَهُ


Almujam-Alkabir-409

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

409. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நான், எனது சகோதரருடன் நபி (ஸல்) அவர்களைக் காண சென்றேன். அப்போது நான் என்னுடைய இரு கைகளில் இரு தங்க காப்புகளை அணிந்திருந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து மறுமையில் அல்லாஹ், நெருப்பாலான இரு தங்க காப்புகளை உனக்கு அணிவித்து விடுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கேட்டார்கள்.

உடனே நான் அவ்விரண்டு தங்க காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டேன். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.


انْطَلَقْتُ مَعَ أَخِي إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلِيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ؟» فَانْتَزَعْتُهُمَا فَرَمَيْتُهُما فَلَا أَدْرِي أَيَّ النَّاسِ أَخَذَهُمَا


Almujam-Alkabir-415

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

415. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இரு தங்க காப்புகள் அணிந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்து, “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கூறினார்கள்.

உடனே அப்பெண்மணி தனது கைகளிலிருந்து அவ்விரண்டு தங்கக் காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டார்கள். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.


كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْصَرَ امْرَأَةً عَلَيْهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ؟» فَخَلَعَتْهَا مِنْ يَدِهَا فَطَرَحَتْهَا فَلَا أَدْرِي مَنْ أَخَذَهُمَا


Musnad-Ahmad-27604

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27604. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நான், எனது சின்னம்மாவுடன் நபி (ஸல்) அவர்களைக் காண சென்றேன். எனது  சின்னம்மா இரு தங்க காப்புகளை அணிந்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து மறுமையில் நெருப்பாலான இரு தங்க காப்புகள் உனக்கு அணிவிக்கப்படுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கேட்டார்கள்.

உடனே நான் எனது சின்னம்மாவிடம் , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு, என் சின்னம்மா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்டார்கள். மறுமையில் நெருப்பாலான இரு தங்க காப்புகள் உனக்கு அணிவிக்கப்படுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று சொன்னதை கூறினேன்.

உடனே என் சின்னம்மா அவ்விரண்டு தங்கக் காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டார்கள். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.


انْطَلَقْتُ مَعَ خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ – أَوْ قَالَتْ: قُلْبَانِ مِنْ ذَهَبٍ – فَقَالَ لِي: «أَيَسُرُّكِ أَنْ يُجْعَلَ فِي يَدِكِ سِوَارَانِ مِنْ نَارٍ؟» فَقُلْتُ لَهَا: يَا خَالَتِي، أَمَا تَسْمَعِينَ مَا يَقُولُ؟ قَالَتْ: وَمَا يَقُولُ؟ قُلْتُ: يَقُولُ: ” أَيَسُرُّكِ أَنْ يُجْعَلَ فِي يَدَيْكِ سِوَارَانِ مِنْ نَارٍ – أَوْ قَالَ: قُلْبَانِ مِنْ نَارٍ -؟، ” قَالَتْ: فَانْتَزَعَتْهُمَا، فَرَمَتْ بِهِمَا، فَلَمْ أَدْرِ أَيُّ النَّاسِ أَخَذَهُمَا؟


Nasaayi-5142

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5142. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காப்புகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள்.

அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த தங்க கழுத்தணியை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான கழுத்தணியை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காதணிகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நெருப்பாலான இரு காதணிகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அந்த பெண்மணி தான் அணிந்திருந்த இரு தங்கக் காப்புகளையும் கழட்டி எறிந்துவிட்டார்.

மேலும் அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் அலங்காரம் செய்யாமல்  இருந்தால் கணவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லையே என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெள்ளியினால் இரு காதணி செய்து அதற்கு  குங்குமப்பூ அல்லது அபீர் மூலம் தங்கத்தை போன்ற நிறமிட்டு அணிவதை யாரும் தடுக்கவில்லையே என்று கூறினார்கள்.

மேற்கண்ட வாசகம் இப்னு ஹர்பின் நூலில் உள்ள வாசகமாகும்.


كُنْتُ قَاعِدًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، قَالَ: «سِوَارَانِ مِنْ نَارٍ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، طَوْقٌ مِنْ ذَهَبٍ قَالَ: «طَوْقٌ مِنْ نَارٍ» قَالَتْ: قُرْطَيْنِ مِنْ ذَهَبٍ، قَالَ: «قُرْطَيْنِ مِنْ نَارٍ» قَالَ: وَكَانَ عَلَيْهِمَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَرَمَتْ بِهِمَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَرْأَةَ إِذَا لَمْ تَتَزَيَّنْ لِزَوْجِهَا صَلِفَتْ عِنْدَهُ، قَالَ: «مَا يَمْنَعُ إِحْدَاكُنَّ أَنْ تَصْنَعَ قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ، ثُمَّ تُصَفِّرَهُ بِزَعْفَرَانٍ أَوْ بِعَبِيرٍ»

اللَّفْظُ لِابْنِ حَرْبٍ


Next Page » « Previous Page