9380. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு தடவை நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு பெண்மனி வந்து அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காப்புகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள்.
அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த தங்க கழுத்தணியை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான கழுத்தணியை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காதணிகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நெருப்பாலான இரு காதணிகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அந்த பெண்மணி தான் அணிந்திருந்த இரு தங்கக் காப்புகளையும் கழட்டி எறிந்துவிட்டார்.
மேலும் அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் அலங்காரம் செய்யாமல் இருந்தால் கணவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லையே என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெள்ளியினால் இரு காதணி செய்து அதற்கு குங்குமப்பூ அல்லது அபீர் மூலம் தங்கத்தை போன்ற நிறமிட்டு அணிவதை யாரும் தடுக்கவில்லையே என்று கூறினார்கள்.
மேற்கண்ட வாசகம் அஹ்மத் நூலில் உள்ள வாசகமாகும்.
كُنْتُ قَاعِدًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْهُ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ قَالَ: «سِوَارَيْنِ مِنْ نَارٍ» قَالَتْ: يَا رَسُولَ اللهِ، طَوْقٌ مِنْ ذَهَبٍ قَالَ: «طَوْقٌ مِنْ نَارٍ» قَالَتْ: قُرْطَيْنِ مِنْ ذَهَبٍ قَالَ: «قُرْطَيْنِ مِنْ نَارٍ» قَالَ: وَكَانَ عَلَيْهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَرَمَتْ بِهِمَا وَقَالَتْ: يَا رَسُولَ اللهِ: «إِنَّ الْمَرْأَةَ إِذَا لَمْ تَزَيَّنْ لِزَوْجِهَا صَلِفَتْ عِنْدَهُ» قَالَ: «مَا يَمْنَعُ إِحْدَاكُنَّ أَنْ تَصْنَعَ قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ، ثُمَّ تُصَفِّرُهُ بِزَعْفَرَانٍ، أَوْ بِعَبِيرٍ»
اللَّفْظُ لِأَحْمَدَ
சமீப விமர்சனங்கள்