ஹதீஸின் தரம்: விபரம் கீழே
24486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து எழும்போதும், அல்லது தொழுகையை நிறைவு செய்த போதும் சில வார்த்தைகளை கூறுவார்கள்.
அதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, “ஒருவர் சபையில் நல்வார்த்தைகள் பேசியிருந்து இந்த வார்த்தைகளைக் கூறினால் இவை அவைகளுக்கு முத்திரையாக மறுமைநாள் வரை (பாதுகாப்பாக) இருக்கும். அவர் நல்லது அல்லாத வேறு எதையும் பேசியிருந்தால் இந்த வார்த்தைகள் அவைகளுக்கு (பாவ) பரிகாரமாக இருக்கும் என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளைக் கூறினார்கள்:
“சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த, அஸ்தக்ஃபிருல்லாஹ, வ அதூபு இலைஹ்.
(பொருள்: யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை. நான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு தேடி அவனிடமே திரும்புகிறேன்)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ مَجْلِسًا، أَوْ صَلَّى، تَكَلَّمَ بِكَلِمَاتٍ، فَسَأَلَتْهُ عَائِشَةُ عَنِ الْكَلِمَاتِ، فَقَالَ: ” إِنْ تَكَلَّمَ بِخَيْرٍ كَانَ طَابِعًا عَلَيْهِنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنْ تَكَلَّمَ بِغَيْرِ ذَلِكَ كَانَ كَفَّارَةً: سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُ اللَّهَ، وَأَتُوبُ إِلَيْهِ
சமீப விமர்சனங்கள்