Month: May 2023

Ibn-Majah-1165

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1165. ராஃபிஉ பின் கதீஜ்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا، ثُمَّ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»

Ibn-Khuzaymah-1200

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை வீட்டில் தொழுவதற்கு வந்துள்ள கட்டளை; ஆழமான கல்வி ஞானம் இல்லாத சிலர், இந்தக் கட்டளை ஏவல்வினைச் சொல்லால் கூறப்பட்டிருப்பதால் பள்ளிவாசலில் மஃக்ரிப் தொழுகையின் சுன்னத் தொழுகையை தொழக்கூடியவர், பாவி என்று கருதிவிடுவர். (இது தவறாகும்; வீட்டில் தொழுவது சிறந்தது என்று இந்தச் செய்தியை புரிந்துக் கொள்ளவேண்டும்.)

1200. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

ஆஸிம் பின் உமர் (ரஹ்) கூறுகிறார்:

மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள், தனது மக்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தியப் பின் எழுந்துச் சென்று பள்ளிவாசலின் வராண்டா பகுதியில் உட்காருவார்கள். பிறகு, இஷாத் தொழுகை நேரம் வருவதற்கு முன் எழுந்துச் சென்று தனது வீட்டில் மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் தொழுகையை தொழுவார்கள். இதை (நான் நேரடியாக) பார்த்துள்ளேன்.

أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى بِهِمُ الْمَغْرِبَ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ» .

قَالَ: «فَلَقَدْ رَأَيْتُ مَحْمُودًا وَهُوَ إِمَامُ قَوْمِهِ يُصَلِّي بِهِمُ الْمَغْرِبَ، ثُمَّ يَخْرُجُ فَيَجْلِسُ بِفِنَاءِ الْمَسْجِدِ حَتَّى يَقُومَ قُبَيْلَ الْعَتَمَةِ، فَيَدْخُلَ الْبَيْتَ، فَيُصَلِّيهُمَا»

Musannaf-Ibn-Abi-Shaybah-6373

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

6373. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

ஆஸிம் பின் உமர் (ரஹ்) கூறுகிறார்:

மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள், தனது மக்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தியப் பின் எழுந்துச் சென்று பள்ளிவாசலின் வராண்டா பகுதியில் உட்காருவார்கள். பிறகு, இஷாத் தொழுகை நேரம் வருவதற்கு முன் எழுந்துச் சென்று தனது வீட்டில் மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் தொழுகையை தொழுவார்கள். இதை (நான் நேரடியாக) பார்த்துள்ளேன்.

أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسْجِدَ بَنِي الْأَشْهَلِ فَصَلَّى بِهِمِ الْمَغْرِبَ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»

قَالَ: فَلَقَدْ «رَأَيْتُ مَحْمُودَ بْنَ لَبِيدٍ وَكَانَ إِمَامَ قَوْمِهِ يُصَلِّي بِهِمِ الْمَغْرِبَ، ثُمَّ يَخْرُجُ فَيَجْلِسُ بِفِنَاءِ الْمَسْجِدِ حَتَّى يَقُومَ قَبْلَ الْعَتَمَةِ، فَيَدْخُلَ بَيْتَهُ فَيُصَلِّيهِمَا»

Musnad-Ahmad-23628

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

23628. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) கூறுகிறார்:

நான், எனது தந்தை (அஹ்மத் பின் ஹம்பல்) அவர்களிடம், மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை பள்ளிவாசலில் தொழக்கூடாது. வீட்டில் தான் தொழவேண்டும்; அதற்கு காரணம் நபி (ஸல்) அவர்கள், “இவை வீட்டில் தொழவேண்டிய தொழுகைகள்” என்று கூறினார்கள் என்று ஒரு மனிதர் கூறியதை குறிப்பிட்டு விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், எந்த மனிதர் அப்படி கூறினார்? என்று கேட்டார்கள். அதற்கு நான், “முஹம்மது பின் அப்துர்ரஹ்மான்” என்று கூறினேன். அதற்கு என் தந்தை, அவர் கூறியது எவ்வளவு அழகான விளக்கமாக உள்ளது! என்றோ அல்லது அவர் எவ்வளவு அழகாக வித்தியாசப்படுத்திக் கூறியுள்ளார்! என்றோ (பாராட்டிக்) கூறினார்கள்.

أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى بِهِمُ الْمَغْرِبَ فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»

Musnad-Ahmad-23624

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

23624.  மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا فَلَمَّا سَلَّمَ مِنْهَا قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ» لِلسُّبْحَةِ بَعْدَ الْمَغْرِبِ

Musnad-Ahmad-21677

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

21677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களில் (சில தொழுகைகளை) தொழுதுக் கொள்ளுங்கள். அவற்றை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

«صَلُّوا فِي بُيُوتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»

Nasaayi-1600

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1600.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப் (ரஹ்)

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَلَمَّا صَلَّى قَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي الْبُيُوتِ»

Tirmidhi-604

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 72

மஃக்ரிப் தொழுகைக்குப்பின் தொழும் (கூடுதல்) தொழுகையை வீட்டில் தொழுவதே சிறந்தது என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.

604. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப்

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு தொடர்களில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை. எனவே இது ‘ஃகரீப்’ வகை ஹதீஸ் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸே ஆதாரபூர்வமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதுவிட்டு இஷா தொழுகைவரை பள்ளிவாசலில் தொழுதுகொண்டேயிருந்தார்கள்”
என ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப் பின் பள்ளிவாசலில் இரண்டு

صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ المَغْرِبَ، فَقَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي البُيُوتِ»

Abu-Dawood-1300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1300.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப் (ரஹ்)

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مَسْجِدَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى فِيهِ الْمَغْرِبَ، فَلَمَّا قَضَوْا صَلَاتَهُمْ رَآهُمْ يُسَبِّحُونَ بَعْدَهَا، فَقَالَ: «هَذِهِ صَلَاةُ الْبُيُوت»

Musnad-Ahmad-17030

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

17030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அதில் (சில தொழுகைகளை) தொழுங்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا، صَلُّوا فِيهَا»

Next Page » « Previous Page