தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-1200

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை வீட்டில் தொழுவதற்கு வந்துள்ள கட்டளை; ஆழமான கல்வி ஞானம் இல்லாத சிலர், இந்தக் கட்டளை ஏவல்வினைச் சொல்லால் கூறப்பட்டிருப்பதால் பள்ளிவாசலில் மஃக்ரிப் தொழுகையின் சுன்னத் தொழுகையை தொழக்கூடியவர், பாவி என்று கருதிவிடுவர். (இது தவறாகும்; வீட்டில் தொழுவது சிறந்தது என்று இந்தச் செய்தியை புரிந்துக் கொள்ளவேண்டும்.)

மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

ஆஸிம் பின் உமர் (ரஹ்) கூறுகிறார்:

மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள், தனது மக்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தியப் பின் எழுந்துச் சென்று பள்ளிவாசலின் வராண்டா பகுதியில் உட்காருவார்கள். பிறகு, இஷாத் தொழுகை நேரம் வருவதற்கு முன் எழுந்துச் சென்று தனது வீட்டில் மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் தொழுகையை தொழுவார்கள். இதை (நான் நேரடியாக) பார்த்துள்ளேன்.

(ibn-khuzaymah-1200: 1200)

بَابُ الْأَمْرِ أَنْ يَرْكَعَ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي الْبُيُوتِ «بِلَفْظِ أَمْرٍ قَدْ يَحْسِبُ بَعْضُ مَنْ لَمْ يَتَبَحَّرِ الْعِلْمَ أَنَّ مُصَلِّيَهَا فِي الْمَسْجِدِ عَاصٍ، إِذِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَنْ يُصَلِّيَهَا فِي الْبُيُوتِ»

حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الْجَزَرِيُّ، نا عَبْدُ الْأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ قَالَ:

أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى بِهِمُ الْمَغْرِبَ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ» .

قَالَ: «فَلَقَدْ رَأَيْتُ مَحْمُودًا وَهُوَ إِمَامُ قَوْمِهِ يُصَلِّي بِهِمُ الْمَغْرِبَ، ثُمَّ يَخْرُجُ فَيَجْلِسُ بِفِنَاءِ الْمَسْجِدِ حَتَّى يَقُومَ قُبَيْلَ الْعَتَمَةِ، فَيَدْخُلَ الْبَيْتَ، فَيُصَلِّيهُمَا»


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1200.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1139.




மேலும் பார்க்க: அஹ்மத்-23624 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.