ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
13478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது கணவரை அதிகம் நேசிப்போரும்; அதிகம் குழந்தையை பெற்றுக்கொள்வோரும்; அவருக்கு கட்டுப்படுவோரும்; அன்பு செலுத்தக்கூடியவர்களும்; அல்லாஹ்வை அஞ்சி நடப்போருமே உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் ஆவார்கள்.
தனது அலங்காரத்தை வெளிப்படுத்தி; பெருமையுடன் நடந்துக் கொள்வோரே உங்கள் பெண்களில் தீயவர்கள் ஆவார்கள். இவர்கள், நயவஞ்சகர்கள் ஆவார்கள். இவர்கள் அலகும் கால்களும் சிவந்த நிறமுடைய காகத்தைப் போன்றே தவிர சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஉதைனா (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தியின் முதல் பகுதி, ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்கள் வழியாக சரியான அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.
خَيْرُ نِسَائِكُمُ الْوَدُودُ الْوَلُودُ الْمُوَاتِيَةُ الْمُوَاسِيَةُ، إِذَا اتَّقَيْنَ اللهَ، وَشَرُّ نِسَائِكُمُ الْمُتَبَرِّجَاتُ الْمُتَخَيِلَّاتُ وَهُنَّ الْمُنَافِقَاتُ لَا يَدْخُلُ الْجَنَّةَ مِنْهُنَّ، إِلَّا مِثْلُ الْغُرَابِ الْأَعْصَمِ ”
وَرُوِيَ بِإِسْنَادٍ صَحِيحٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا إِلَى قَوْلِهِ: ” إِذَا اتَّقَيْنَ اللهَ
சமீப விமர்சனங்கள்