பாடம் : 116
அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து வைத்துள்ள ஏதேனும் ஒரு செய்தியை எனக்கு கூறுங்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாளில் (யவ்முத் தர்வியா) எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என கேட்டேன்.
அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ” மினாவில் (தொழுதார்கள்) என பதிலளித்தார்கள். நான், “(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13 ஆவது) நாளில் (யவ்முந் நஃப்ர்) எங்கு அவர்கள் அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் என்று பதிலளித்து விட்டு, பிறகு உன்னுடைய (ஹஜ் குழுவின்) தலைவர்கள் செய்வதைப் போன்று செய்துகொள்” என்றும் கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்::
இது ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இது சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் யூசுஃப் அல்அஸ்ரக் (ரஹ்)வழியாக மட்டுமே ஃகரீபாக அறிவிக்கப்படுகிறது.
أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى . قَالَ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ . ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ
சமீப விமர்சனங்கள்