Month: June 2024

Al-Adabul-Mufrad-407

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

407.


«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُصَارِمَ مُسْلِمًا فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، فَإِنَّهُمَا مَا صَارَمَا فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، فَإِنَّهُمَا نَاكِبَانِ عَنِ الْحَقِّ مَا دَامَا عَلَى صِرَامِهِمَا، وَإِنَّ أَوَّلَهُمَا فَيْئًا يَكُونُ كَفَّارَةً لَهُ سَبْقُهُ بِالْفَيْءِ، وَإِنْ هُمَا مَاتَا عَلَى صِرَامِهِمَا لَمْ يَدْخُلَا الْجَنَّةَ جَمِيعًا»


Abu-Dawood-4912

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4912. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

மூன்று நாட்கள் கடந்துவிட்டால், அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் கூறவேண்டும். அவரும் பதில் ஸலாம் கூறிவிட்டால் இருவரும் நன்மையில் சமமாகிவிடுவார்கள். அவர் பதில் ஸலாம் கூறாவிட்டால் அவர் பாவத்தைச் செய்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஹ்மத் பின் ஸயீத் அவர்கள், “முதலில் ஸலாம் கூறியவர் பேசாமல் இருந்த குற்றத்தை விட்டு நீங்கிவிடுவார்” என்ற வாக்கியத்தை கூடுதலாக அறிவித்துள்ளார்.


«لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ، فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ، فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدِ اشْتَرَكَا فِي الْأَجْرِ، وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالْإِثْمِ»

زَادَ أَحْمَدُ «وَخَرَجَ الْمُسَلِّمُ مِنَ الْهِجْرَةِ»


Musnad-Ahmad-9092

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

9092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர், மற்றவருடன் நட்பை முறித்து) மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருப்பது கூடாது.

ஒருவர் தனது சகோதரருடன் மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருந்து அந்நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகத்துக்குச் செல்வார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا هِجْرَةَ فَوْقَ ثَلَاثٍ، فَمَنْ هَجَرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ، دَخَلَ النَّارَ»


Musnad-Ahmad-9881

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9881.


«لَا هِجْرَةَ بَعْدَ ثَلَاثٍ – أَوْ فَوْقَ ثَلَاثٍ -، فَمَنْ هَاجَرَ بَعْدَ ثَلَاثٍ – أَوْ فَوْقَ ثَلَاثٍ – فَمَاتَ، دَخَلَ النَّارَ»


Abu-Dawood-4914

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

4914. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம், தனது (முஸ்லிமான) சகோதரனுடன் மூன்று நாட்களுக்குமேல் (நட்பை முறித்து) பேசாமலிருப்பது ஆகுமானதல்ல.

ஒருவர் மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருந்து அந்நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகத்துக்குச் செல்வார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ دَخَلَ النَّارَ»


Almujam-Assaghir-884

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

884. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)


«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرَكُهُ مَا لَا يَعْنِيهِ»


Tirmidhi-2318

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அலீ பின் ஹுஸைன் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் பல மாணவர்கள் இவ்வாறே ஸுஹ்ரீ —> அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியே நம்முடைய பார்வையில் (ஹதீஸ் எண்-2317 இல் இடம்பெற்றுள்ள) அபூஸலமா (ரஹ்) —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியை விட மிகச் சரியானதாகும்.

அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள், அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் காலத்தை அடையவில்லை.


«إِنَّ مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكَهُ مَا لَا يَعْنِيهِ»


Muwatta-Malik-2628

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2628. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அலீ பின் ஹுஸைன் (ரஹ்)


مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ، تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ


Tirmidhi-2317

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2317. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்திலுள்ள செய்தியாகும். இந்தச் செய்தி அபூஸலமா (ரஹ்) அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


«مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»


Ibn-Majah-1393

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

1393. அப்துர்ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(எனது தந்தையான) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்ற தகவல் தெரிந்தபோது) அவர்கள் ஸஜ்தாவில் விழுந்தார்கள்.


«لَمَّا تَابَ اللَّهُ عَلَيْهِ خَرَّ سَاجِدًا»


Next Page » « Previous Page