Month: July 2024

Musannaf-Abdur-Razzaq-10319

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10319. இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு வாலிபர் தன்னை விரும்பிய பெண்ணை, திருமணம் செய்துக்கொள்ள (அவளது உறவினர்களிடம்) பெண் பேசினார். அந்தப் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

நான் இது பற்றி தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “இருவரில் ஒருவரையொருவர் நேசித்துக் கொள்ளும் காரணங்களில் திருமணத்தைப் போன்று (வேறு எதுவும்) காணப்படவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டுவிட்டு (அந்த பெண்ணை அவருக்கு) திருமணம் செய்துவைக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள்.


خَطَبَ رَجُلٌ شَابٌّ امْرَأَةً قَدْ أَحَبَّتْهُ، فَأَبَوْا أَنْ يُزَوِّجُوهَا إِيَّاهُ، فَسَأَلْتُ طَاوُسًا، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ النِّكَاحِ»، وَأَمَرَنِي أَنْ أُزَوِّجَ


Ibn-Majah-1847

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1847. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவரில் ஒருவரையொருவர் நேசித்துக் கொள்ளும் காரணங்களில் திருமணத்தைப் போன்று (வேறு எதையும்) நாம் பார்க்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَمْ نَرَ – يُرَ – لِلْمُتَحَابَّيْنِ مِثْلُ النِّكَاحِ»


Abu-Dawood-3095

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இஸ்லாமிய அரசின்கீழ் வாழும், (நோயுற்ற) பிறமதத்தவர்களை நலம் விசாரித்தல்.

3095. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி-ஸல்-அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த) ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, ‘இஸ்லாதை ஏற்றுக் கொள்!’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.

அப்போது அவர், ‘அபுல் காஸிம் (நபி-ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.


أَنَّ غُلَامًا، مِنَ الْيَهُودِ كَانَ مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ، وَهُوَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ أَبُوهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ فَأَسْلَمَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ بِي مِنَ النَّارِ»


Next Page » « Previous Page