தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-10319

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10319. இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு வாலிபர் தன்னை விரும்பிய பெண்ணை, திருமணம் செய்துக்கொள்ள (அவளது உறவினர்களிடம்) பெண் பேசினார். அந்தப் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

நான் இது பற்றி தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “இருவரில் ஒருவரையொருவர் நேசித்துக் கொள்ளும் காரணங்களில் திருமணத்தைப் போன்று (வேறு எதுவும்) காணப்படவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டுவிட்டு (அந்த பெண்ணை அவருக்கு) திருமணம் செய்துவைக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள்.


عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ قَالَ:

خَطَبَ رَجُلٌ شَابٌّ امْرَأَةً قَدْ أَحَبَّتْهُ، فَأَبَوْا أَنْ يُزَوِّجُوهَا إِيَّاهُ، فَسَأَلْتُ طَاوُسًا، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ النِّكَاحِ»، وَأَمَرَنِي أَنْ أُزَوِّجَ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-10319.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-10072.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக்

2 . மஃமர் பின் ராஷித்

3 . இப்ராஹீம் பின் மைஸரா

4 . தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

5 . நபி (ஸல்)


1 . இந்தச் செய்தியை இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஃமர் பின் ராஷித்,பிறப்பு ஹிஜ்ரி 95
இறப்பு ஹிஜ்ரி 153
வயது: 58
இப்னு ஜுரைஜ், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஆகியோர், இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரைக் கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10319 , 10377 , முஸ்னத் அபீ யஃலா-2747)

2 . இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
மட்டும், இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: இப்னுமாஜா-1847)

முஹம்மத் பின் முஸ்லிமை விட மற்ற மூவரும் மிகப்பலமானவர்கள் என்பதால் அவர்களின் செய்திக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.


3 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் மன்ஸூர், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அபான், அபூகைஸமா, ஹுமைதீ ஆகியோர் ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
—>
இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரைக் கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

(பார்க்க: ஸுனன் ஸயீத்-492 , முஸ்னத் பஸ்ஸார்-4858 , முஸ்னத் அபீ யஃலா-2747 , அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-4/134)

4 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஅம்மல் பின் இஸ்மாயீல் மட்டும், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
—>
இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4857)

முஅம்மல் பின் இஸ்மாயீல் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.


5 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் பின் ஹஸ்ஸான் என்பவர், ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: முஃஜமுஷ் ஷுயூக்-201 , அல்இர்ஷாத்-அபூயஃலா கலீலீ-175 , 249)

அப்துஸ்ஸமத் பின் ஹஸ்ஸான் அறிவிக்கும் இது போன்ற மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் விசயத்தில் விமர்சனம் உள்ளது.


6 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹர்ப்
அவர்கள், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
—>
அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி உள்ளது.

(பார்க்க: மஷ்யகது இப்னு ஷாதான்-61 , தம்முல் ஹவா-இப்னுல் ஜவ்ஸீ-593)

இதில் இடம்பெறும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ
என்பவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


الضعفاء الكبير للعقيلي (4/ 134)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ التَّزْوِيجِ»

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى الْأَسَدِيُّ، حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ قَالَ: سَمِعْتُ طَاوُسًا، يَقُولُ قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ النِّكَاحِ» . هَذَا أَوْلَى

மேற்கண்ட இரு வகையான அறிவிப்பாளர்தொடர்களில் முர்ஸலாக வந்துள்ள செய்திக்கே உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் முன்னுரிமை தந்துள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-4/134)


1 . இந்தக் கருத்தில் தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10319 , 10377 , ஸுனன் ஸயீத்-492 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-15915 , முஸ்னத் பஸ்ஸார்-4858 , முஸ்னத் அபீ யஃலா-2747 , குப்ரா பைஹகீ-13452 ,


  • ஸுனன் ஸயீத்-492.

سنن سعيد بن منصور (1/ 164)
492 – حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلُ النِّكَاحِ»


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னுமாஜா-1847 .


 

அப்துர்ரஸ்ஸாக்

عبد الرزاق بن همام بن نافع

இறப்பு: ஹிஜ்ரி 211, யமன்

தரம்: பலமானவர், மனனசக்தி மிக்கவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம் பின் நாஃபிஃ

தந்தை பெயர்: ஹம்மாம் பின் நாஃபிஃ அல்ஹிம்யாரீ

வம்சம்: ஹிம்யாரீ

புனைப்பெயர்: அபூபக்ர்

ஊர் பெயர்: ஸன்ஆ

பயணித்த ஊர்கள்: யமன், ஹிஜாஸ், ஷாம், ஈராக்

பிறப்பு: ஹிஜ்ரி 126, ஸன்ஆ, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 211, யமன்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துர்ரஸ்ஸாக் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 126 இல் யமன் நாட்டின் ஸன்ஆவில் பிறந்தார். இவர் ஹதீஸ் துறையில் மிகப் பெரிய அறிஞராகவும், மனனசக்தி மிக்கவராகவும் திகழ்ந்தார். அல்-முஸன்னஃப், தஃப்ஸீர் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

ஹதீஸ் அறிஞர்கள் பலர் இவரிடம் வந்து ஹதீஸ்களைக் கற்றனர். இவர் ஹிஜ்ரி 211 இல் யமனில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஹம்மாம் பின் நாஃபிஃ அல்ஹிம்யாரீ, வஹ்ப் பின் நாஃபிஃ அஸ்ஸன்ஆனீ, அய்மன் பின் நாபில், இக்ரிமா பின் அம்மார், இப்னு ஜுரைஜ், உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஜஃபர் பின் ஸுலைமான் அத்தபஃஈ, யூனுஸ் பின் ஸுலைம் அஸ்ஸன்ஆனீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, யஹ்யா பின் மயீன், அலீ பின் அல்மதீனீ, ஸுஃப்யான் பின் உயைனா, வக்கீஃ பின் அல்ஜர்ராஹ், ஹம்மாத் பின் உஸாமா, ஸலமா பின் ஷபீப், அம்ர் பின் முஹம்மத் அன்னாக்கித், முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, மஹ்மூத் பின் ஃகைலான், அஹ்மத் பின் ஸாலிஹ் அல்மிஸ்ரீ

வேறு பெயர்கள்: அபூபக்ர், அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்


ஆதாரம்: muslimscholars.info (20121) · Should verify

மஃமர் பின் ராஷித்

معمر بن راشد

இறப்பு: ஹி-154

தரம்: மிகப் பலமானவர், என்றாலும் இவர் சிலரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை சரியாக மனனமிடவில்லை.


இயற்பெயர்: மஃமர்

தந்தை பெயர்: ராஷித்

புனைப்பெயர்: அபூஉர்வா

ஊர் பெயர்: யமன், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி-96.

இறப்பு: ஹிஜ்ரி-154.

கால கட்டம்: 7.


இவர் ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களில் ஒருவர். ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களான மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் மஃமர் என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறு ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களை முதல் தரத்திலிருந்து கடைசி தரம் வரை வகைப்படுத்துவதில் சில அறிஞர்களிடம் மாற்றுக் கருத்தும் உள்ளது.

ஈராக்வாசிகளிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. ஆனால் ஈராக்வாசிகளான ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானது என்று இப்னு மயீன் கூறியுள்ளார். புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இந்த வகை அறிவிப்பாளர்தொடரை பதிவு செய்துள்ளனர்.

ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ், ஹம்மாம் பின் முனப்பிஹ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானவை.


முஸ்லிமில் இடம்பெறும் இரு செய்திகளைத் தவிர மஃமர் அவர்கள் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்...


ஸாபித், ஹிஷாம் பின் உர்வா, ஆஸிம் பின் அபுன்னுஜூத் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை...


ஆய்வுக்காக: மஃமர் - ஸாபித் குறித்து அல்பானி அவர்களின் தகவல்.


இஸ்ஹாக் அத்தபரீ என்பவரின் நூல்: ஹதீஸு இஸ்ஹாக் தபரீ.

இப்ராஹீம் பின் மைஸரா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

طاوس بن كيسان

இறப்பு: ஹிஜ்ரி 106, மக்கா (முஸ்தலிஃபா அல்லது மினா)

தரம்: மிகப் பலமானவர், இமாம், ஃபகீஹ், ஃபாழில்


விபரங்கள்

இயற்பெயர்: தாவூஸ் (தக்வான்) பின் கைஸான்

தந்தை பெயர்: கைஸான்

வம்சம்: அல்ஹிம்யரீ, அல்ஃபாரஸீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: யமன், ஹிஜாஸ்

பிறப்பு: ஹிஜ்ரி 30 (தோராயமாக), யமன்

இறப்பு: ஹிஜ்ரி 106, மக்கா (முஸ்தலிஃபா அல்லது மினா)

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

தாவூஸ் பின் கைஸான் ரஹ் அவர்கள் யமன் நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப் பலமான தாபிஈ, இமாம், ஃபகீஹ் மற்றும் அறிஞர் ஆவார். அவர் ஹிஜ்ரி 30ல் யமனில் பிறந்தார். இப்னு அப்பாஸ் ரலி, இப்னு உமர் ரலி, அபூ ஹுரைரா ரலி, ஆயிஷா ரலி போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

அவர் ஹிஜ்ரி 106ல் மக்காவில் (முஸ்தலிஃபா அல்லது மினாவில்) மரணமடைந்தார். அவர் நாற்பது ஹஜ்ஜுகள் செய்தவர் என்றும், அவரது துஆக்கள் அங்கீகரிக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. இப்னு அப்பாஸ் ரலி அவர்கள், "தாவூஸ் சொர்க்கவாசிகளில் ஒருவர் என்று நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அபூ ஹுரைரா, ஆயிஷா பின்த் அபூபக்ர், ஸைத் பின் ஸாபித், ஸைத் பின் அர்கம், ஸுராகா பின் மாலிக், ஸஃப்வான் பின் உமைய்யா, அப்துல்லாஹ் பின் ஷத்தாத், ஜாபிர் பின் அப்துல்லாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் தாவூஸ், வஹ்ப் பின் முனப்பஹ், ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஸுலைமான் பின் அபூ முஸ்லிம் அல்அஹ்வல், அபூ ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம், அஸ்ஸுஹ்ரீ, இப்ராஹீம் பின் மைஸரா அத்தாஇஃபீ, ஹபீப் பின் அபூ ஸாபித், அல்கம் பின் உதைபா, அல்ஹஸன் பின் முஸ்லிம் பின் யனாஃப், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், அம்ர் பின் தீனார்

வேறு பெயர்கள்: தாவூஸ் (தக்வான்) பின் கைஸான், அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (11053) · Should verify

நபி (ஸல்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.