தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-10319

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு வாலிபர் தன்னை விரும்பிய பெண்ணை, திருமணம் செய்துக்கொள்ள (அவளது உறவினர்களிடம்) பெண் பேசினார். அந்தப் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

நான் இது பற்றி தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “இருவரில் ஒருவரையொருவர் நேசித்துக் கொள்ளும் காரணங்களில் திருமணத்தைப் போன்று (வேறு எதுவும்) காணப்படவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டுவிட்டு (அந்த பெண்ணை அவருக்கு) திருமணம் செய்துவைக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள்.

(musannaf-abdur-razzaq-10319: 10319)

عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ قَالَ:

خَطَبَ رَجُلٌ شَابٌّ امْرَأَةً قَدْ أَحَبَّتْهُ، فَأَبَوْا أَنْ يُزَوِّجُوهَا إِيَّاهُ، فَسَأَلْتُ طَاوُسًا، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ النِّكَاحِ»، وَأَمَرَنِي أَنْ أُزَوِّجَ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-10319.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-10072.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக்

2 . மஃமர் பின் ராஷித்

3 . இப்ராஹீம் பின் மைஸரா

4 . தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

5 . நபி (ஸல்)


1 . இந்தச் செய்தியை இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஃமர் பின் ராஷித்,பிறப்பு ஹிஜ்ரி 95
இறப்பு ஹிஜ்ரி 153
வயது: 58
இப்னு ஜுரைஜ், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஆகியோர், இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரைக் கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10319 , 10377 , முஸ்னத் அபீ யஃலா-2747)

2 . இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
மட்டும், இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: இப்னுமாஜா-1847)

முஹம்மத் பின் முஸ்லிமை விட மற்ற மூவரும் மிகப்பலமானவர்கள் என்பதால் அவர்களின் செய்திக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.


3 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் மன்ஸூர், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அபான், அபூகைஸமா, ஹுமைதீ ஆகியோர் ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
—>
இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரைக் கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

(பார்க்க: ஸுனன் ஸயீத்-492 , முஸ்னத் பஸ்ஸார்-4858 , முஸ்னத் அபீ யஃலா-2747 , அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-4/134)

4 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஅம்மல் பின் இஸ்மாயீல் மட்டும், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
—>
இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4857)

முஅம்மல் பின் இஸ்மாயீல் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.


5 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் பின் ஹஸ்ஸான் என்பவர், ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்ராஹீம் பின் மைஸரா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: முஃஜமுஷ் ஷுயூக்-201 , அல்இர்ஷாத்-அபூயஃலா கலீலீ-175 , 249)

அப்துஸ்ஸமத் பின் ஹஸ்ஸான் அறிவிக்கும் இது போன்ற மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் விசயத்தில் விமர்சனம் உள்ளது.


6 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹர்ப்
அவர்கள், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
—>
அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-முத்தஸிலாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி உள்ளது.

(பார்க்க: மஷ்யகது இப்னு ஷாதான்-61 , தம்முல் ஹவா-இப்னுல் ஜவ்ஸீ-593)

இதில் இடம்பெறும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ
என்பவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


الضعفاء الكبير للعقيلي (4/ 134)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ التَّزْوِيجِ»

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى الْأَسَدِيُّ، حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ قَالَ: سَمِعْتُ طَاوُسًا، يَقُولُ قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ النِّكَاحِ» . هَذَا أَوْلَى

மேற்கண்ட இரு வகையான அறிவிப்பாளர்தொடர்களில் முர்ஸலாக வந்துள்ள செய்திக்கே உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் முன்னுரிமை தந்துள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-4/134)


1 . இந்தக் கருத்தில் தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1031910377 , ஸுனன் ஸயீத்-492 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-15915 , முஸ்னத் பஸ்ஸார்-4858 , முஸ்னத் அபீ யஃலா-2747 , குப்ரா பைஹகீ-13452 ,


  • ஸுனன் ஸயீத்-492.

سنن سعيد بن منصور (1/ 164)
492 – حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلُ النِّكَاحِ»


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னுமாஜா-1847 .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.