தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-321

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 மாதவிடாய் காலத்தில் விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்: (மாதவிடாய் ஏற்பட்ட) அந்தப் பெண் தொழுகைகளை விட்டுவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

‘பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?’ என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘நீ ‘ஹரூர்’ எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்’ என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்’ என முஆதா அறிவித்தார்.
Book : 6

(புகாரி: 321)

بَابٌ: لاَ تَقْضِي الحَائِضُ الصَّلاَةَ

وَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: وَأَبُو سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَدَعُ الصَّلاَةَ»

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: حَدَّثَتْنِي مُعَاذَةُ

أَنَّ امْرَأَةً قَالَتْ لِعَائِشَةَ: أَتَجْزِي إِحْدَانَا صَلاَتَهَا إِذَا طَهُرَتْ؟ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ «كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ يَأْمُرُنَا بِهِ» أَوْ قَالَتْ: فَلاَ نَفْعَلُهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.