தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-325

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 ஒரு பெண்ணுக்கு ஒரே மாதத்தில் மூன்றுமுறை மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாய், கர்ப்பம் ஆகியவற்றில் , சம்பந்தப்பட்ட பெண்ணின் கூற்றை ஏற்றுக் கொள்வதும், மாதவிடாய் தொடர்பாக சாத்தியமுள்ள கூற்றே ஏற்கப்படும் என்பதும்.

ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (அப்பெண்கள்) தங்கள் கருவறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது (2:228).

ஒரு பெண் மார்க்கப்பற்றுள்ள தன் நெருங்கிய உறவினர்களில் ஒரு சாட்சியைக் கொண்டு வந்து (வழக்கமாக தனது குடும்பத்துப் பெண்களுக்கு ஏற்படுவது போன்று) தமக்கும் ஒரே மாதத்தில் மூன்று முறை மாதவிடாய் ஏற்பட்டதாகக் கூறினால் அவளது கூற்று ஏற்கப்படும் என அலீ (ரலி) , ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

(விவகாரத்துச் செய்யப்பட்ட) ஒரு பெண்ணின் இத்தா காலம் (விவாகரத்துக்கு) முன்னாலுள்ள அவளது (மாதவிடாய்கால) வழக்கத்தை ஒட்டியே கணிக்கப்படும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: மாதவிடாய் (குறைந்தது) ஒரு நாளிலிருந்து (அதிகபட்சமாக) பதினைந்து நாட்கள் வரை நீடிக்கலாம்.

சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் மாதவிடாய் நின்று தூய்மையடைந்ததிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து ஒரு பெண் இரத்தத்தைக் காண்பது குறித்து (அது மாதவிடாயாகக் கருதப்படுமா? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், இது விஷயமாக பெண்களே நன்கறிவார்கள் என்று பதிலளித்தார்கள். இதைத் தம் தந்தை சுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஅதமிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

  ‘பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘கூடாது. அது ஒரு நரம்பு நோய்; மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாள்களின் அளவுக்குத் தொழுகையைவிட்டுவிடு. பின்னர் தொழுது கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6

(புகாரி: 325)

بَابُ إِذَا حَاضَتْ فِي شَهْرٍ ثَلاَثَ حِيَضٍ، وَمَا يُصَدَّقُ النِّسَاءُ فِي الحَيْضِ وَالحَمْلِ، فِيمَا يُمْكِنُ مِنَ الحَيْضِ

لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ} [البقرة: 228] وَيُذْكَرُ عَنْ عَلِيٍّ، وَشُرَيْحٍ: «إِنِ امْرَأَةٌ جَاءَتْ بِبَيِّنَةٍ مِنْ بِطَانَةِ أَهْلِهَا مِمَّنْ يُرْضَى دِينُهُ، أَنَّهَا حَاضَتْ ثَلاَثًا فِي شَهْرٍ صُدِّقَتْ»

وَقَالَ عَطَاءٌ: «أَقْرَاؤُهَا مَا كَانَتْ وَبِهِ» قَالَ إِبْرَاهِيمُ: وَقَالَ عَطَاءٌ: «الحَيْضُ يَوْمٌ إِلَى خَمْسَ عَشْرَةَ» وَقَالَ مُعْتَمِرٌ: عَنْ أَبِيهِ: سَأَلْتُ ابْنَ سِيرِينَ عَنِ المَرْأَةِ تَرَى الدَّمَ بَعْدَ قُرْئِهَا بِخَمْسَةِ أَيَّامٍ؟ قَالَ: «النِّسَاءُ أَعْلَمُ بِذَلِكَ»

حَدَّثَنَا أَحْمَدُ ابْنُ أَبِي رَجَاءٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ

أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ، فَقَالَ: «لاَ إِنَّ ذَلِكِ عِرْقٌ، وَلَكِنْ دَعِي الصَّلاَةَ قَدْرَ الأَيَّامِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهَا، ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.