தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6056

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 கோள் சொல்வதன் தீமை அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) குறை கூறித் திரிகின்ற, கோள் சொல்லி அலைகின்ற (எவருக்கும் நீங்கள் இணங்கிவிடாதீர்கள்). (68:11) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: குறை சொல்லிக்கொண்டும் புறம் பேசிக் கொண்டும் திரிகின்ற எவருக்கும் கேடுதான். (104:1) (இதன் மூலத்தில் உள்ள ஹுமஸத், லுமஸத் ஆகியவற்றின் வினைச் சொற்களான) யஹ்மிஸு, யல்மிஸு ஆகிய சொற்களுக்கும் ‘யஈபு’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. (குறை கூறுதல்.)

 ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் ‘(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்’ என்று கூறப்பட்டது.

அப்போது ஹுதைஃபா(ரலி) ‘கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

Book : 78

(புகாரி: 6056)

بَابُ مَا يُكْرَهُ مِنَ النَّمِيمَةِ

وَقَوْلِهِ: {هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ} [القلم: 11] {وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ} [الهمزة: 1]: يَهْمِزُ وَيَلْمِزُ: وَيَعِيبُ وَاحِدٌ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ

كُنَّا مَعَ حُذَيْفَةَ، فَقِيلَ لَهُ: إِنَّ رَجُلًا يَرْفَعُ الحَدِيثَ إِلَى عُثْمَانَ، فَقَالَ لَهُ حُذَيْفَةُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَدْخُلُ الجَنَّةَ قَتَّاتٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.