தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-328

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 ஹஜ்ஜில், தவாஃபுல் இஃபாளா எனும் தவாஃபை முடித்தபின் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அவளுக்கு (கடைசித் தவாஃபான) தவாஃபுல் விதாஉ செய்ய அனுமதி உண்டா?

(குறிப்பு: ஹாஜிகள் துல்ஹஜ் 10ஆவது நாள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்தபின் மக்காவை நோக்கிப் புறப்பட்டுச் சென்று மீண்டும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வர வேண்டும். இதனை தவாஃபுல் இஃபாளா எனப்படுகிறது. இது தவாஃபுஸ் ஸியாரா, தவாஃபுர் ருக்ன் ஆகிய பெயர்களிலும் அறியப்படுகிறது)

  ‘ஹஜ்ஜின்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது’ எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் ‘அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே!

உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?’ என்று கேட்டார்கள். ‘தவாஃப் செய்துவிட்டார்’ என (அங்கிருந்தோர்) கூறினார்கள். ‘அப்படியானால் புறப்படுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6

(புகாரி: 328)

بَابُ المَرْأَةِ تَحِيضُ بَعْدَ الإِفَاضَةِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَا رَسُولَ اللَّهِ، إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ قَدْ حَاضَتْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّهَا تَحْبِسُنَا أَلَمْ تَكُنْ طَافَتْ مَعَكُنَّ»، فَقَالُوا: بَلَى، قَالَ: «فَاخْرُجِي»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.