தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6145

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 90 கவிதை, யாப்பிலக்கணப் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப் பட்டதும்.162 அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகை யோரென்றால்), அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து தங்களுக்கு (வசைப்பாடல் மூலம்) அநீதியிழைக்கப்பட்ட பின்னர் (அதற்குப்) பதிலடி தருகிறார்களோ அவர்களைத் தவிர. அநீதியிழைத்தவர்கள், தாம் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை விரைவில் அறிந்து கொள்வார்கள். (26:224-227) (26:225ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிகிறார்கள்’ என்பதற்கு ‘எல்லா வீண் வேலைகளிலும் அவர்கள் மூழ்குவார்கள் என்று பொருள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விவரித்தார்கள்.163

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.

என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

Book : 78

(புகாரி: 6145)

بَابُ مَا يَجُوزُ مِنَ الشِّعْرِ وَالرَّجَزِ وَالحُدَاءِ وَمَا يُكْرَهُ مِنْهُ

وَقَوْلِهِ: {وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الغَاوُونَ أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ، وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لاَ يَفْعَلُونَ، إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا، وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ} [الشعراء: 225] قَالَ ابْنُ عَبَّاسٍ: «فِي كُلِّ لَغْوٍ يَخُوضُونَ»

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ مَرْوَانَ بْنَ الحَكَمِ، أَخْبَرَهُ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ أَخْبَرَهُ: أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.