ஹைஸம் இப்னு அபீ சினான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் தங்களின் பேச்சுக்கிடையே நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது) உங்கள் சகோதரர் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர். (நபி(ஸல்) அவர்களைப் பராட்டிய பின்வருமாறு) அவர் பாடினார் என்றார்கள்:
எங்களிடையே இறைத்தூதர் இருக்கிறார்கள். வைகறை பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்; குருட்டுத்தனத்தில் இருந்த எங்களுக்கு அவர்கள் நேர்வழி காண்பித்தார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன். இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது இவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book :78
(புகாரி: 6151)حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ الهَيْثَمَ بْنَ أَبِي سِنَانٍ، أَخْبَرَهُ
أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، فِي قَصَصِهِ، يَذْكُرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَخًا لَكُمْ لاَ يَقُولُ الرَّفَثَ» يَعْنِي بِذَاكَ ابْنَ رَوَاحَةَ، قَالَ:
[البحر الطويل]
وَفِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ … إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الفَجْرِ سَاطِعُ
أَرَانَا الهُدَى بَعْدَ العَمَى فَقُلُوبُنَا … بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ
يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ … إِذَا اسْتَثْقَلَتْ بِالكَافِرِينَ المَضَاجِعُ
تَابَعَهُ عُقَيْلٌ، عَنِ الزُّهْرِيِّ وَقَالَ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، وَالأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ
சமீப விமர்சனங்கள்