தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6162

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உனக்குக் கேடுதான் (வைலக்க!) உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே!’ என மூன்று முறை கூறிவிட்டு, ‘உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால்,'(அவரைப் பற்றி) நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் (அவ்வாறு இருக்கிறார் என) அறிந்தால் அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு)

செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்’ என்று கூறினார்கள்.

Book :78

(புகாரி: 6162)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ

أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” وَيْلَكَ، قَطَعْتَ عُنُقَ أَخِيكَ – ثَلاَثًا – مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ: أَحْسِبُ فُلاَنًا، وَاللَّهُ حَسِيبُهُ، وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا، إِنْ كَانَ يَعْلَمُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.