தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6176

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 98 ‘நல்வரவு’ (மர்ஹபா) கூறல்197 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா வைக் காண்டதும்) ‘என் புதல்விக்கு நல்வரவு’ என்று கூறினார்கள்.198 உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் ஒன்று விட்ட சகோதரரான) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ‘உம்மு ஹானீக்கு நல்வரவு!’ என்று கூறி(வரவேற்க லா)னார்கள்.199

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, ‘இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த தூதுக் குழுவினரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!’ என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அப்போது அக்குழுவினர் ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆ குலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாராவோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே (இறை மறுப்பாளர்களான) முளர் குலத்தார் (தடையாக) உள்ளனர். (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் தவிர (வேறு மாதத்தில்) தங்களிடம் நாங்கள் வந்து சேர முடிவதில்லை. எனவே (வாய்மையையும் பொய்மையையும் பாகுபடுத்தும்) சில தீர்க்கமான விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள். அத(னைக் கடைப்பிடிப்பத)ன் மூலம் நாங்கள் சொர்க்கம் சொல்வோம். எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கிவிட்ட)வர்களுக்கு அறிவிப்போம்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்கு (விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்). நான்கு (விஷயங்களைத் தடை செய்கிறேன்). தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தைச் செலுத்துங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோறுங்கள். உங்களுக்குக் கிடைக்கு போர்ச் செல்வத்திலிருந்து ஐந்திலொரு பங்கை (குமுஸ்) கொடுத்து விடுங்கள்.

மேலும், (மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை; மண் சாடி; பேரீச்ச மரத்தின் பீப்பாய்; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் நீங்கள் பருகாதீர்கள்’ என்றார்கள்.200

Book : 78

(புகாரி: 6176)

بَابُ قَوْلِ الرَّجُلِ: مَرْحَبًا

وَقَالَتْ عَائِشَةُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ: «مَرْحَبًا بِابْنَتِي» وَقَالَتْ أُمُّ هَانِئٍ: جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ»

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

لَمَّا قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَرْحَبًا بِالوَفْدِ، الَّذِينَ جَاءُوا غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا حَيٌّ مِنْ رَبِيعَةَ، وَبَيْنَنَا وَبَيْنَكَ مُضَرُ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي الشَّهْرِ الحَرَامِ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ نَدْخُلُ بِهِ الجَنَّةَ، وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا، فَقَالَ: ” أَرْبَعٌ وَأَرْبَعٌ: أَقِيمُوا الصَّلاَةَ، وَآتُوا الزَّكَاةَ، وَصُومُوا رَمَضَانَ، وَأَعْطُوا خُمُسَ مَا غَنِمْتُمْ. وَلاَ تَشْرَبُوا فِي الدُّبَّاءِ وَالحَنْتَمِ وَالنَّقِيرِ وَالمُزَفَّتِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.