பாடம் : 35 நண்பர்களுக்கு முன்னால் சாய்ந்து அமர்வது. கப்பாப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (கஅபாவின் நிழலில்) ஒரு சால்வையைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தார்கள். நான் (எதிரிகளின் கொடுமைகளிலிருந்து எம்மைக் காக்குமாறு) அல்லாஹ்விடம் தாங்கள் பிரார்த்திக் கூடாதா? என்று கேட்டேன். உடனே அவர்கள் (நேராக எழுந்து) அமர்ந்தார்கள்.55
அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பெரும்பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வன் தூதரே’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்’ என்றார்கள்.
Book : 79
(புகாரி: 6273)بَابُ مَنِ اتَّكَأَ بَيْنَ يَدَيْ أَصْحَابِهِ
قَالَ خَبَّابٌ: ” أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً، قُلْتُ: أَلاَ تَدْعُو اللَّهَ، فَقَعَدَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا الجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَلاَ أُخْبِرُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ»
சமீப விமர்சனங்கள்