தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6333

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடம், ‘துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார்கள். துல்கலஸா என்பது, (அறியாமைக் காலத்திலிருந்து) ஒரு பலிபீடமாகும். அதனை மக்கள் வழிபட்டு வந்தனர். அது ‘யமன் நாட்டு கஅபா’ என அழைக்கப்பட்டுவந்தது. நான், ‘இறைத்தூதர் அவர்களே! குதிரையில் நான் சரியாக உட்கார முடியாதவனாக இருக்கிறேன்’ என்று கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்துவிட்டு, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இது வரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.

இதையடுத்து என் சமுதாயத்தாரான ‘அஹ்மஸ்’ குலத்தாரில் ஐம்பது பேருடன் நான் (துல்கலஸா நோக்கிப்) புறப்பட்டேன்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினருடன் நான் நடந்தேன்’ என்று சுஃப்யான்(ரஹ்) அவர்கள் சில நேரங்களில் அறிவித்தார்கள்:

பிறகு, நான் ‘துல்கலஸா’ சென்று அந்த பலிபீடத்தை எரித்துவிட்டேன். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தப் பலிபீடத்)தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் தங்களிடம் நான் வந்துள்ளேன்’ என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், (என்) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் அவர்களின் குதிரைகளுக்காகவும் (வளர்ச்சி) வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.

Book :80

(புகாரி: 6333)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ جَرِيرًا، قَالَ

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الخَلَصَةِ» وَهُوَ نُصُبٌ كَانُوا يَعْبُدُونَهُ، يُسَمَّى الكَعْبَةَ اليَمَانِيَةَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ لاَ أَثْبُتُ عَلَى الخَيْلِ، فَصَكَّ فِي صَدْرِي، فَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ، وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا» قَالَ: فَخَرَجْتُ فِي خَمْسِينَ فَارِسًا مِنْ أَحْمَسَ مِنْ قَوْمِي، وَرُبَّمَا قَالَ سُفْيَانُ: فَانْطَلَقْتُ فِي عُصْبَةٍ مِنْ قَوْمِي فَأَتَيْتُهَا فَأَحْرَقْتُهَا، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا أَتَيْتُكَ حَتَّى تَرَكْتُهَا مِثْلَ الجَمَلِ الأَجْرَبِ، فَدَعَا لِأَحْمَسَ وَخَيْلِهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.