தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6387

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறங்கும்போது) ‘ஏழு’ அல்லது ‘ஒன்பது’ பெண் மக்களைவிட்டுச் சென்றார்கள். எனவே, (அவர்களைப் பராமரிப்பதற்கேற்ப) நான் (ஒரு கன்னிகழிந்த பெண்ணை) மணந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘ஜாபிரே! மணமுடித்துக் கொண்டாயாமே?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணையா? அல்லது கன்னி கழிந்த பெண்ணையா? (யாரை மணந்தாய்?)’ என்று கேட்டார்கள். நான், ‘கன்னி கழிந்த பெண்ணைத்தான்’ என்று சொன்னேன். ‘கன்னிப் பெண்ணை மணந்து ‘அவளோடு நீயும் உன்னோடு அவளுமாக கூடிக்குலாவி மகிழ்ந்திருக்கலாமே!’ அல்லது ‘நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!’ என்று கேட்டார்கள்.

நான், ‘என் தந்தை ஏழு அல்லது ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். அந்தப் பெண்மக்களைப் போன்று (இளவயதுப்) பெண்ணை (மணந்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, அவர்களைப் பராமரிக்கும் (தகுதியுள்ள கன்னிகழிந்த ஒரு) பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்’ என்று கூறினேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘பாரக்கல்லாஹு அலைக்க’ (அவ்வாறாயின் அல்லாஹ் உங்கள் மிது அருள்வளம் பொழிவானாக) என்று பிரார்த்தித்தார்கள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) மற்றும் முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் ‘பாரக்கல்லாஹு அலைக்க’ என்பது இடம்பெறவில்லை.

Book :80

(புகாரி: 6387)

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

هَلَكَ أَبِي وَتَرَكَ سَبْعَ أَوْ تِسْعَ بَنَاتٍ، فَتَزَوَّجْتُ امْرَأَةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجْتَ يَا جَابِرُ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا» قُلْتُ: ثَيِّبًا، قَالَ: «هَلَّا جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ، أَوْ تُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ» قُلْتُ: هَلَكَ أَبِي فَتَرَكَ سَبْعَ أَوْ تِسْعَ بَنَاتٍ، فَكَرِهْتُ أَنْ أَجِيئَهُنَّ بِمِثْلِهِنَّ، فَتَزَوَّجْتُ امْرَأَةً تَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «فَبَارَكَ اللَّهُ عَلَيْكَ» لَمْ يَقُلْ ابْنُ عُيَيْنَةَ، وَمُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرٍو: «بَارَكَ اللَّهُ عَلَيْكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.