தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-79

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் கற்றுத் தந்த சில எண்ணிக்கையில் அமைந்த வசனங்களுக்கு மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பவர்களாக இருந்தார்கள்.

(bazzar-79: 79)

حدثنا محمد بن المثنى، قالَ: حَدَّثَنا محمد بن خالد بن عثمة، قالَ: حَدَّثَنا حفص أظنه ابن عبد الله , عن هشام بن عروة , عن أبيه , عن عائشة رضي الله عنها قالت:

مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يفسر شيئا من القرآن إلا آيا بعدد علمه إياه جبريل.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-79.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




  • இந்தச் செய்தி சில பிரதிகளில் கீழ்கண்டவாறு வந்துள்ளது.

مَا كَانَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم ‌يُفسِّرُ ‌شَيئًا ‌مِنَ ‌القُرآنِ (برأيِهِ)، إِلَّا آيًا بِعَدَدٍ عَلَّمَهُ إيَّاه جبريل

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனின் வசனங்களுக்கு சுயமாக விளக்கமளிக்க மாட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் கற்றுத் தந்த சில எண்ணிக்கையில் அமைந்த வசனங்களுக்கு மட்டுமே விளக்கமளிப்பார்கள்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பஸ்ஸார் இமாம்.

2 . முஹம்மது பின் முஸன்னா.

3 . முஹம்மது பின் காலித் பின் அஸ்மஹ்.

4 . ஹஃப்ஸ் (பின் அப்துல்லாஹ்).

5 . ஹிஷாம் பின் உர்வா.

6 . உர்வா பின் ஸுபைர்.

7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி).

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் பற்றி பலவாறு கூறப்பட்டுள்ளது. ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் அஸ்ஸுபைரீ என்பதே சரியானதாகும்.

ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் என்பவரிடமிருந்து அறிவிப்பவர்கள் பற்றிய விவரம்:

1 . முஹம்மது பின் காலித் பின் அஸ்மஹ்.

(இவரிடமிருந்து 1 . முஹம்மது பின் முஸன்னா, 2 . அப்பாஸ் பின் அப்துல்அளீம், 3 . புன்தார் (முஹம்மது பின் பஷ்ஷார்) ஆகியோர் அறிவித்துள்ளனர்) 

2 . மஃன் பின் ஈஸா.

(இவரிடமிருந்து 1 . இஸ்ஹாக், 2 . அபூபக்ர்-முஹம்மது பின் யஸீத், 3 . ஹாரூன் பின் அப்துல்லாஹ், 4 . இப்ராஹீம் பின் அல்முன்திர் ஆகியோர் அறிவித்துள்ளனர்) 

3 . அப்துல்லாஹ் பின் நாஃபிஃ.

(இவரிடமிருந்து 1 . இப்ராஹீம் பின் அல்முன்திர் அறிவித்துள்ளார்) 

4 . காலித் பின் மக்லத் அல்கதவானீ.

(இவரிடமிருந்து 1 . அய்யாஷ் பின் முஹம்மத் அறிவித்துள்ளார்)

  • ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் பற்றி வந்துள்ளவை:

1 . ஹஃப்ஸ் பின் அப்துல்லாஹ்.

(முஸ்னத் பஸ்ஸார்-79 , கஷ்ஃபுல் அஸ்தார்-2185)

இவற்றில் நூலாசிரியரோ, அல்லது இப்னு அஸ்மஹ்-விடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் முஸன்னா அவர்களோ ஹஃப்ஸ் பின் அப்துல்லாஹ் என்பதை சந்தேகமாகக் கூறியுள்ளனர்.

2 . முஹம்மது பின் காலித் என்பவரின் மகனான இன்னவர்.

(முஸ்னத் அபீ யஃலா-4528 , அல்மக்ஸத்-1165 , அல்இத்ஹாஃப்-5991 , அல்மதாலிபுல் ஆலியா-3513)

மஃன் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்ஹாக் என்பவர் மட்டும் இவ்வாறு அறிவித்துள்ளார்.

முஸ்னத் பஸ்ஸார்-79 , முஸ்னத் அபீ யஃலா-4528 வின் செய்திகளை குறிப்பிட்டுவிட்டு இதில் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் உறுதியாகக் கூறப்படவில்லை என்று ஹைஸமீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: மஜ்மஉஸ் ஸவாஇத்-6/303)

3 . ஜஃபர் பின் முஹம்மது (பின் காலித்) அஸ்ஸுபைரீ.

(தஃப்ஸீருத் தபரீ-90 , அல்காமிஸு மினல் அஃப்ராத்-31 , தம்முல் கலாமி வ அஹ்லிஹீ-561)

1 . இப்னு அஸ்மஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் முஸன்னா, அப்பாஸ் பின் அப்துல்அளீம், புன்தார் (முஹம்மது பின் பஷ்ஷார்) ஆகியோரில் அப்பாஸ் பின் அப்துல்அளீம் இவ்வாறு அறிவித்துள்ளார். இவரே மற்றவர்களை விட பலமானவர்.

2 . இவ்வாறே, மஃன் பின் ஈஸா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹாரூன் பின் அப்துல்லாஹ், இப்ராஹீம் பின் அல்முன்திர் ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

3 . இவ்வாறே அப்துல்லாஹ் பின் நாஃபிஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்ராஹீம் பின் அல்முன்திர் அவர்கள் ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் அஸ்ஸுபைரீ என்றே அறிவித்துள்ளார்.

4 . இவ்வாறே காலித் பின் மக்லத் அல்கதவானீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அய்யாஷ் பின் முஹம்மத் அவர்கள், ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் அஸ்ஸுபைரீ என்றே அறிவித்துள்ளார்)

4 . ஜஃபர் பின் காலித்.

(தஃப்ஸீருத் தபரீ-91)

ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் என்பவரே இதில் ஜஃபர் பின் காலித் என்று கூறப்பட்டுள்ளார். சிலர், பாட்டனார் பெயருடன் அழைக்கப்படுவது வழமை என்பதின் படி இவர் ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் என்றே முடிவு செய்யவேண்டும். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரின் பெயரை காலித் பின் மக்லத் அவர்கள் ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். மஃன் அவர்கள் ஜஃபர் பின் காலித் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

«التاريخ الكبير» للبخاري (2/ 679 ت الدباسي والنحال):

«[2141] جَعْفرُ بنُ خالدِ بنِ الزُّبَير بنِ العَوَّامِ القُرَشيُّ، الأَسَديُّ .

قال لي خالدُ بنُ مَخْلَدٍ: قال: ثنا جَعْفَرُ بنُ مُحمَّدِ بنِ خالدِ بنِ الزُّبيرِ بنِ العَوَّامِ.

سَمِعَ عبدَ اللَّهِ بنَ عُروةَ، وهِشامَ بنَ عُروةَ.

وقال مَعْنٌ: عَنْ جَعْفرِ بنِ خالدٍ»

தஃப்ஸீருத் தபரீ-91 இன் அறிவிப்பாளர்தொடரில் மஃன் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூபக்ர்-முஹம்மது பின் யஸீத் பற்றி இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்ற விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

5 . முஹம்மது பின் ஜஃபர் அஸ்ஸுபைரீ.

(அஸ்ஸிகாத்-இப்னு ஹிப்பான்-10575)

இப்னு அஸ்மஹ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் புன்தார் (முஹம்மது பின் பஷ்ஷார்) மட்டுமே இவ்வாறு அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அறிவிக்கும் அப்பாஸ் பின் அப்துல்அளீம் ஸிகத்-ஹாஃபிள் என்ற தரம் உடையவர்; இவர்  ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் அஸ்ஸுபைரீ என்று அறிவித்துள்ளார் என்பதுடன் வேறுசிலரும் இவ்வாறு அறிவித்துள்ளனர் என்பதால் இவரின் அறிவிப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே இந்தச் செய்தியில் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிப்பவர் ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் அஸ்ஸுபைரீ என்பவராவார் என்று முடிவு செய்ய வேண்டும்.


ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் அஸ்ஸுபைரீ என்பவரைப் பற்றிய விமர்சனம்:

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஜரீர் தபரீ அவர்கள் இவர் அந்தளவிற்கு ஹதீஸ்கலை அறிஞர்களிடம் பிரபலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
  • இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 374
    முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
  • இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    அவர்கள் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
      அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 374
    ஆகியோரின் விமர்சனத்தைக் குறிப்பிட்டுவிட்டு இதை முன்கரான; அரிதான செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/487, அஸ்ஸிகாத்-6/133, தாரீகுல் இஸ்லாம்-4/323, மீஸானுல் இஃதிதால்-1529, 1/416, லிஸானுல் மீஸான்-2/468, தஃப்ஸீரு இப்னு கஸீர்-1/14)

  • இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்களின் சொல்லை விட புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களின் கூற்றுக்கே முதலிடம் தரவேண்டும் என்பதின்படி இவர் மிக பலவீனமானவர் ஆவார்.
  • சிலர் அபுல்ஃபத்ஹ் அல்அஸ்தீ என்பவர் விமர்சிக்கப்பட்டவர் தான் என்றாலும் இவர் ஊரைச் சேர்ந்தவர்கள் பற்றி இவர் கூறும் விமர்சனத்தை ஏற்கின்றனர். மேலும் இந்த விமர்சனத்தை இவரின் ஆசிரியர் இப்னு ஜரீர் தபரீ கூறியிருப்பதால் தான் அவரும் கூறியுள்ளார் என்பதால் இவர் முன்கருல் ஹதீஸ் என்று கூறும் விமர்சனம் ஏற்புடையதே!. புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களின் விமர்சனமும் இந்தக் கருத்தையே தரும்.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் அவர்கள், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரைப் பற்றி தாரீகுல் கபீரில் விமர்சனம் எதுவும் கூறவில்லை; இப்னு அபூஹாதிமும் தனது நூலில் இவரைப் பற்றி விமர்சிக்கவில்லை; இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார் என்று குறிப்பிட்டு விட்டு இதனால் ஜஃபர் பின் முஹம்மதை ஆதாரமாக ஏற்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இப்னு ஜரீர் அவர்கள், இவரைப் பற்றி அறியாவிட்டாலும் மற்றவர்கள் இவரை அறிந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

(தஃலீக்-தப்ஸீருத் தபரீ-90, 91)

1 . தபரீ அவர்களின் விமர்சனம் சரியானதே!. ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்; அதிகமானோர் இவரிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தியை ஜஃபர் பின் முஹம்மது மட்டும் தனித்து அறிவித்துள்ளார் என்பதால் இதில் குறை உள்ளது.

2 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், தாரீகுல் கபீரில் இவரைப் பற்றி கூறியிருக்காவிட்டாலும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் தனது மீஸானுல் இஃதிதாலில் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் பல நூல்களிலிருந்து எடுத்தே தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் பதிவு செய்துள்ளார் என்பதால் இது சரியாக இருக்க வாய்ப்புள்ளது.

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-79 , முஸ்னத் அபீ யஃலா-4528 ,

  • தஃப்ஸீருத் தபரீ-90 , 91 .

تفسير الطبري = جامع البيان ت شاكر (1/ 84)

90- حدثكم به العباس بن عبد العظيم، قال: حدثنا محمد بن خالد ابن عَثْمة، قال: حدثني جعفر بن محمد الزبيري، قال: حدثني هشام بن عروة، عن أبيه، عن عائشة، قالت: ما كان النبي صلى الله عليه وسلم يُفسِّر شيئًا منَ القرآن إلا آيًا بعَددٍ، علَّمهنّ إياه جبريلُ.

91- حدثنا أبو بكر محمد بن يزيد الطرسوسي، قال: أخبرنا مَعْن، عن جعفر بن خالد، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة، قالت: لم يكن النبيُّ صلى الله عليه وسلم يفسر شيئًا من القرآن، إلا آيًا بعَددٍ، علمهنّ إياه جبريل عليه السلام

தஃப்ஸீருத் தபரீ-91 இல் இடம்பெறும் அபூபக்ர்-முஹம்மது பின் யஸீத் அத்தரதூஸீ என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் பலமானவர்களின் பட்டியலில் கூறியிருந்தாலும் சில நேரம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் தில்லுமுல்லு வேலைகளைச் செய்பவர்; ஹதீஸை இட்டுக்கட்டக்கூடியவர் என்று கூறியுள்ளார். கதீப் பஃக்தாதீ அவர்கள், இவர் கைவிடப்பட்டவர் என்று கூறியுள்ளார். (நூல்: முஃஜமு ஷுயூகித் தபரீ-331, பக்:608)

الثقات لابن حبان (7/ 395)

10575 – مُحَمَّد بْن جَعْفَر الزبيرِي يروي عَنْ هِشَام بن عُرْوَة روى عَنهُ مُحَمَّد بْن خَالِد بْن عَثْمَة يُخطئ وَيُخَالف روى هِشَام بْن عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَسِّرُ شَيْئًا مِنَ الْقُرْآنِ إِلا آيًا عَلَمَهُنَّ إِيَّاهُ جِبْرَائِيلُ حَدَّثَنَاهُ الطَّبَرِيُّ قَالَ ثَنَا بنْدَار قَالَ ثَنَا بن عَثْمَةَ قَالَ ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ ثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ

وَيُشْبِهُ أَنْ يَكُونَ مَعْنَى التَّفْسِيرِ لِلآيَةِ بِعَيْنِهَا وَأَمَّا سُنَّتُهُ كُلُّهَا فَهِيَ تَفْسِيرُ الْقُرْآنِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِم

  • அல்காமிஸு மினல் அஃப்ராத்-31 .

الخامس من الأفراد لابن شاهين (ص: 229)

31- حَدَّثَنَا الْبَغَوِيُّ قَالَ حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ خَالِدٍ الزُّبَيْرِيُّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يُفَسِّرُ مِنَ الْقُرْآنِ إِلا آيٍ بِعَدَدٍ عَلَّمَهُنَّ إِيَّاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الْمَدِينَةِ لا أَعْلَمُ رَوَاهُ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ الزُّبَيْرِيِّ إِلا مَعْنُ بْنُ عِيسَى وَخَالِدُ بْنُ مَخْلَدٍ الْقَطَوَانِيُّ

حَدَّثَنِيهِ أَبِي قَالَ: حَدَّثَنَا عَيَّاشُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ خَالِدٍ الزُّبَيْرِيِّ.

وَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَمْ نَسْمَعْهُ إِلا مِنْهُ يَعْنِي مِنْ هَارُونَ بْنِ عَبْدِ اللَّهِ.

  • தம்முல் கலாமி வ அஹ்லிஹீ-561 .

ذم الكلام وأهله (3/ 232)

561 – أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ الْحُسَيْنِ بْنِ عَليّ الدَّارمِيّ بِنَيْسَابُورٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ إِسْحَاقَ الْحَافِظُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونِ بْنِ مَسْعُودٍ الزَّيَّاتُ الْبَالِسِيُّ بِأَنْطَاكِيَةَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ أَخْبَرَنَا مَعْنُ بْنُ عِيسَى عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ خَالِدٍ

ح وَأَخْبَرَنَا عَلِيُّ بْنُ بُشْرَى أَخْبَرَنَا ابْنُ مَنْدَهْ أَخْبَرَنَا ابْنُ الَأَعْرَابِيِّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الصَّائِغُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ حَدَّثَنَا جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ خَالِدٍ الزُّبَيْرِيُّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَسِّرُ شَيْئًا مِنَ الْقُرْآنِ إِلَّا آيًا تَعُدُّهُ عَلَّمَهُنَّ إِيَّاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ  لَفْظُ مَعْنِ بْنِ عِيسَى

இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்மாயீல் பின் ஹுஸைன், முஹம்மது பின் மைமூன் அஸ்ஸய்யாத் ஆகியோர் யாரென அறியப்படாதவர்கள் ஆவர்.

  • அல்முஃதலிஃப் வல்முக்தலிஃப்.

المؤتلف والمختلف لابن القيسراني = الأنساب المتفقة في الخط المتماثلة في النقط (ص: 171)

أخبرنَا غَانِم بن أبي نصر أخبرنَا أَبُو نعيم أخبرنَا أَبُو عَليّ الصَّواف حَدثنَا عبد الله الصَّقْر السكرِي حَدثنَا إِبْرَاهِيم بن الْمُنْذر حَدثنَا معن بن عِيسَى حَدثنَا جَعْفَر بن مُحَمَّد الخالدي من ولد خَالِد بن الزبير عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت: كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَا يُفَسر من الْقُرْآن إِلَّا آيا بِعَدَد علمهن جِبْرِيل عَلَيْهِ السَّلَام

  • கஷ்ஃபுல் அஸ்தார்-2185 .

كشف الأستار عن زوائد البزار (3/ 39)

2185 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ثنا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَثْمَةَ، ثنا حَفْصٌ – أَظُنُّهُ ابْنَ عَبْدِ اللَّهِ – عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَسِّرُ شَيْئًا مِنَ الْقُرْآنِ، إِلا آيًا بِعَدَدٍ عَلَّمَهُ إِيَّاهُ جِبْرِيلُ.

அல்மக்ஸத்-1165 .

المقصد العلي في زوائد أبي يعلى الموصلي (3/ 87)

1165 – حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا مَعْنٌ الْقَزَّازُ، عَنْ فُلانِ بْنِ مُحَمَّدِ بْنِ خَالِدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لا يُفَسِّرُ شَيْئًا مِنَ الْقُرْآنِ بِرَأْيِهِ إِلا آيًا تُعَدُّ عَلَّمَهُنَّ إِيَّاهُ جِبْرِيلُ؟

அல்இத்ஹாஃப்-5991 .

إتحاف الخيرة المهرة بزوائد المسانيد العشرة (6/ 345)

5991 – قَالَ أَبُو يَعْلَى: وَثَنَا إِسْحَاقُ، ثَنَا مَعْنٌ الْقَزَّازُ، عَنْ فُلَانِ بْنِ مُحَمَّدِ بْنِ خَالِدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ- رَضِيَ اللَّهُ عَنْهَا-: “أَنَّ النَّبِيَّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – كَانَ لَا يُفَسِّرُ شَيْئًا من القرآن برأيه إلا آياً بعدد، عَلَّمَهُنَّ إِيَّاهُ جِبْرِيلُ

அல்மதாலிபுல் ஆலியா-3513 .

المطالب العالية بزوائد المسانيد الثمانية (14/ 427)

3513 – قال أَبُو يَعْلَى: ثنا إِسْحَاقُ، ثنا مَعْنٌ عَنْ فُلَانِ ابن مُحَمَّدِ بْنِ خَالِدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُفَسِّرُ شَيْئًا مِنَ الْقُرْآنِ إِلَّا آيًا بِعَدَدِ عَلَّمَهُنَّ إِيَّاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ.

கஷ்ஃபுல் அஸ்தார்-2185 , அல்மக்ஸத்-1165 , அல்இத்ஹாஃப்-5991 , அல்மதாலிபுல் ஆலியா-3513 ஆகியவை முஸனத் அபூயஃலா-4528 வின் அறிவிப்புகளாகும். இவற்றில் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயரை இஸ்ஹாக் அவர்கள் கூறவில்லை.


«علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية» (14/ 162):

«3503- وسئل عن حديث عروة، عن عائشة، كان النبي صلى الله عليه وسلم لا يفسر من القرآن إلا آيا تعدد علمهن إياه جبريل صلى الله عليه وسلم.

فَقَالَ: يَرْوِيهِ هِشَامُ بْنُ عُرْوَةَ، وَاخْتُلِفَ عَنْهُ؛

فرواه جعفر بن محمد بن خالد الزبيري، عن هشام، عن أبيه، عن عائشة، أن النبي صلى الله عليه وسلم كان لا يفسر إلا ما علمه جبريل.

وخالفه ابن أبي الزناد، رواه عن هشام، عن أبيه، قال: ‌لم ‌تكن ‌عائشة ‌تفسر ‌شيئا إلا ما سمعته مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وهو الصحيح»

மேற்கண்ட, ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து ஜஃபர் பின் முஹம்மது பின் காலித் அஸ்ஸுபைரீ அறிவிக்கும் இந்தச் செய்தி பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களிடம் கேட்கப்படும் போது, ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் அறிவிக்கும்

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டவற்றை மட்டுமே கூறி குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமளிப்பார்கள்”

என்ற செய்தியே சரியானது என்று கூறினார்.

(நூல்: அல்இலல் வாரிதா-3503, 14/162)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.