தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6468

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு (லுஹர்) தொழுகையை தொழ வைத்துவிட்டுப் பிறகு சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி கிப்லாத் திசையில் தம் கையால் சைகை செய்தவாறு கூறினார்கள்:

நான் உங்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த முன் சுவற்றில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் காட்சி எனக்குக் காட்டப்பட்டது. நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று கண்டதைப் போன்று என்றும் நான் கண்டதில்லை. நன்மை தீமைகளின் விளைவுகளை இன்று கண்டதைப் போன்று என்றுமே நான் கண்டதில்லை (என்று பல முறை கூறினார்கள்.)

Book :81

(புகாரி: 6468)

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى لَنَا يَوْمًا الصَّلاَةَ، ثُمَّ رَقِيَ المِنْبَرَ، فَأَشَارَ بِيَدِهِ قِبَلَ قِبْلَةِ المَسْجِدِ، فَقَالَ: «قَدْ أُرِيتُ الآنَ مُنْذُ صَلَّيْتُ لَكُمُ الصَّلاَةَ، الجَنَّةَ وَالنَّارَ، مُمَثَّلَتَيْنِ فِي قُبُلِ هَذَا الجِدَارِ، فَلَمْ أَرَ كَاليَوْمِ فِي الخَيْرِ وَالشَّرِّ، فَلَمْ أَرَ كَاليَوْمِ فِي الخَيْرِ وَالشَّرِّ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.