தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6469

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 (இறைவன் வழங்கும் தண்டனை குறித்து) அச்சம் கொள்ளும் அதே நேரத்தில் (அவனது அருள் மீது) நம்பிக்கையும் வைத்தல்.51 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களே! நீங்கள் தவ்ராத், இன்ஜீல் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (குர்ஆன் உள்ளிட்ட இதர வேதங்கள் ஆகிய)வற்றை முழுமையாகச் செயல்படுத்தாத வரை நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை என (நபியே!) கூறிவிடுக எனும் (5:68ஆவது) வசனத்தைவிட எனக்குக் கடுமையானது குர்ஆனில் வேறெதுவுமில்லை.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 81

(புகாரி: 6469)

بَابُ الرَّجَاءِ مَعَ الخَوْفِ

وَقَالَ سُفْيَانُ: ” مَا فِي القُرْآنِ آيَةٌ أَشَدُّ عَلَيَّ مِنْ: {لَسْتُمْ عَلَى شَيْءٍ حَتَّى تُقِيمُوا التَّوْرَاةَ وَالإِنْجِيلَ، وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ} [المائدة: 68]

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«إِنَّ اللَّهَ خَلَقَ الرَّحْمَةَ يَوْمَ خَلَقَهَا مِائَةَ رَحْمَةٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً، وَأَرْسَلَ فِي خَلْقِهِ كُلِّهِمْ رَحْمَةً وَاحِدَةً، فَلَوْ يَعْلَمُ الكَافِرُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ لَمْ يَيْئَسْ مِنَ الجَنَّةِ، وَلَوْ يَعْلَمُ المُؤْمِنُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ العَذَابِ لَمْ يَأْمَنْ مِنَ النَّارِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.