தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-569

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹதீஸ் எண்-568 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர், திர்மிதீ-568 இல் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரை விட மிகச் சரியானது (உண்மையானது) ஆகும்.

அபுத்தர்தா (ரலி) அறிவிக்கும் இந்த செய்தி, உமர் பின் ஹய்யான் அத்திமஷ்கீ எனும் (தரம் அறியப்படாத) அறிவிப்பாளரிடமிருந்து ஸயீத் பின் அபூஹிலால் (ரஹ்) வழியாக மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம். ஆகவே, இது “ஃகரீப்” எனும் வகையைச் சேர்ந்த ஹதீஸ் ஆகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 569)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ عُمَرَ وَهُوَ ابْنُ حَيَّانَ الدِّمَشْقِيُّ، قَالَ: سَمِعْتُ مُخْبِرًا يُخْبِرُ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

نَحْوَهُ بِلَفْظِهِ،

وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ سُفْيَانَ بْنِ وَكِيعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ. حَدِيثُ أَبِي الدَّرْدَاءِ. حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ عُمَرَ الدِّمَشْقِيِّ. وَفِي البَابِ عَنْ عَلِيٍّ، وَابْنِ عَبَّاسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَابْنِ مَسْعُودٍ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَعَمْرِو بْنِ العَاصِ


Tirmidhi-Tamil-519.
Tirmidhi-TamilMisc-519.
Tirmidhi-Shamila-569.
Tirmidhi-Alamiah-519.
Tirmidhi-JawamiulKalim-519.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ உமர் பின் ஹய்யான் அத்திமிஷ்கீ யாரென அறியப்படாதவர். மேலும் இதில் இவருக்கும் உம்முத்தர்தா அவர்களுக்கும் இடையில் கூறப்படும் மனிதரும் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் ஆகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-568.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.