தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6611

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

(பாவங்களிலிருந்து) அல்லாஹ்வால் பாதுகாக்கப்பெற்றவரே மாசற்றவர் ஆவார்.

(11:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆஸிம்’ (பாதுகாப்பாளர்) என்பதற்குத் தடுக்கக் கூடியவர்’ என்று பொருள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (75:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுதன்’ (வீணாக) என்பதற்கு வழிகேட்டில் உழன்று கொண்டு சத்தியத்தைப் புறக்கணிப்பது’ என்று பொருள்.

(91:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஸ்ஸாஹா’ (பாவத்தில் புதைத்தான்) என்பதற்கு வழிகேட்டில் மூழ்கடித்தான்’ என்று பொருள்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

Book : 82

(புகாரி: 6611)

بَابٌ: المَعْصُومُ مَنْ عَصَمَ اللَّهُ
{عَاصِمٌ} [يونس: 27]: مَانِعٌ قَالَ مُجَاهِدٌ: {سَدًّا} [الكهف: 94]: عَنِ الحَقِّ، يَتَرَدَّدُونَ فِي الضَّلاَلَةِ. {دَسَّاهَا} [الشمس: 10]: أَغْوَاهَا

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَا اسْتُخْلِفَ خَلِيفَةٌ إِلَّا لَهُ بِطَانَتَانِ: بِطَانَةٌ تَأْمُرُهُ بِالخَيْرِ وَتَحُضُّهُ عَلَيْهِ، وَبِطَانَةٌ تَأْمُرُهُ بِالشَّرِّ وَتَحُضُّهُ عَلَيْهِ، وَالمَعْصُومُ مَنْ عَصَمَ اللَّهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.