தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6690

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

நேர்த்திக்கடன் மற்றும் பாவமன்னிப்புக்காக ஒருவர் தமது செல்வத்தை அன்பளிப்பாக வழங்கினால் (செல்லுமா?)89

 கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

(தபூக் போருக்குச் செல்லாமல் பின் தங்கிவிட்ட மூவரான எங்களைக் குறித்து) அல்லாஹ் ‘போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:118 வது) வசனத்தை அருளினான்.

நான் ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாகத் தந்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது’ என்று கூறினார்கள்.

இதை, கஅப் (ரலி) அவர்கள் (தம் இறுதிக் காலத்தில்) கண் பார்வை இழந்துவிட்டபோது அன்னாரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த அன்னாரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) அறிவித்தார்.90

Book : 83

(புகாரி: 6690)

‌‌بَابُ إِذَا أَهْدَى مَالَهُ عَلَى وَجْهِ النَّذْرِ وَالتَّوْبَةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ،

وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ، قَالَ: سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، فِي حَدِيثِهِ: {وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا} [التوبة: ١١٨] فَقَالَ فِي آخِرِ حَدِيثِهِ: إِنَّ مِنْ تَوْبَتِي أَنِّي أَنْخَلِعُ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ، فَهُوَ خَيْرٌ لَكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.