பாடம் : 14
(நபியே!) கலாலா’ (-அதாவது மூலவாரிசுகளோ கிளைவாரிசுகளோ இல்லாத நிலை-) குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்.
(அவர்களிடம்) கூறுக: கலாலா’ தொடர்பாக அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன் இறந்து, அவனுக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச்சென்ற(சொத்)தில் பாதி கிடைக்கும்.
குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரன் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவன் (முழு) வாரிசாவான். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரு பாகம் கிடைக்கும்.
சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான(பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும். நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கிக் கூறுகின்றான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் (எனும் 4:176ஆவது இறைவசனம்).
பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.
(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (பாகப்பிரிவினை தொடர்பான) வசனம், ‘அந்நிஸா’ அத்தியாயத்தின் இறுதி வசனமான ‘(நபியே!) ‘கலாலா’ குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்’ என்று தொடங்கும் வசனமாகும்.30
Book : 86
(புகாரி: 6744)بَابُ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الكَلاَلَةِ، إِنِ امْرُؤٌ هَلَكَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ، وَهُوَ يَرِثُهَا إِنْ لَمْ يَكُنْ لَهَا وَلَدٌ فَإِنْ كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَانِ مِمَّا تَرَكَ، وَإِنْ كَانُوا إِخْوَةً رِجَالًا وَنِسَاءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنْثَيَيْنِ، يُبَيِّنُ اللَّهُ لَكُمْ أَنْ تَضِلُّوا وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ} [النساء: 176]
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
آخِرُ آيَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ: {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الكَلاَلَةِ} [النساء: 176]
சமீப விமர்சனங்கள்