தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6751

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி அவரை விடுதலை செய்தவருக்கே உண்டு என்பது பற்றியும், கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு வாரிசு யார் என்பது பற்றியும்.40

கண்டெடுக்கப்பட்ட குழந்தை அடிமையாகாது என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அவளை விலைக்கு வாங்கிக் கொள். ஏனெனில், (அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அந்த அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு’ என்றார்கள். மேலும், பரீராவுக்கு ஓர் ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அந்த ஆடு பரீராவுக்கு தர்மமாகும். (பரீராவிடமிருந்து நமக்கு அது அன்பளிப்பாகும்’ என்றார்கள்.41

 

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் இப்னு உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திரம் பெற்றவராக இருந்தார்.

ஹகம் அவர்களின் இந்த அறிவிப்பு ‘முர்சல்’ (அறிவிப்பாளர்தொடரில் நபித் தோழர் விடுபட்டது) ஆகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்’ என்றார்கள்.

Book : 86

(புகாரி: 6751)

بَابٌ: الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ، وَمِيرَاثُ اللَّقِيطِ
وَقَالَ عُمَرُ: «اللَّقِيطُ حُرٌّ»

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

اشْتَرَيْتُ بَرِيرَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَإِنَّ الوَلاَءَ لِمَنْ أَعْتَقَ» وَأُهْدِيَ لَهَا شَاةٌ، فَقَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ»

قَالَ الحَكَمُ: «وَكَانَ زَوْجُهَا حُرًّا» وَقَوْلُ الحَكَمِ مُرْسَلٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «رَأَيْتُهُ عَبْدًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.