பாடம் : 38
இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் திருமணமான பின் விபசாரம் செய்து ஆட்சித் தலைவர் முன் நிறுத்தப் பட்டால் சட்டம் என்ன?
அபூ இஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள் என்றார்கள். நான் (குர்ஆனின் 24 வது அத்தியாயமான) ‘அந்நூர்’ அருளப்படுவதற்கு முன்பா? அல்லது அதற்கு பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘எனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார்கள்.54
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. சிலருடைய அறிவிப்பில் (‘அந்நூர் ‘ என்பதற்கு பதிலாக) ‘அல்மாயிதா ‘ என்று இடம் பெற்றுள்ளது. (அந்நூர் எனும்) முதல் அறிவிப்பே சரியானதாகும்.
Book : 86
(புகாரி: 6840)بَابُ أَحْكَامِ أَهْلِ الذِّمَّةِ وَإِحْصَانِهِمْ، إِذَا زَنَوْا وَرُفِعُوا إِلَى الإِمَامِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ،
سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، عَنِ الرَّجْمِ فَقَالَ: «رَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقُلْتُ: أَقَبْلَ النُّورِ أَمْ بَعْدَهُ؟ قَالَ: «لاَ أَدْرِي»
تَابَعَهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَالمُحَارِبِيُّ، وَعَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنِ الشَّيْبَانِيِّ وَقَالَ بَعْضُهُمْ: المَائِدَةِ، وَالأَوَّلُ أَصَحُّ
சமீப விமர்சனங்கள்