தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6865

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உபைதுல்லாஹ் இப்னு அதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்,) ‘இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என்னுடைய கை ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு அவன் (என்னை விட்டுப்போய்) ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து) கொண்டு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்’ என்று சொன்னான். அவன் இதைச் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(வேண்டாம்.) அவனைக் கொல்லாதே’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்!’ என்று கேட்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய்’ என்று கூறினார்கள்.

Book :87

(புகாரி: 6865)

حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَزِيدَ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيٍّ، حَدَّثَهُ:

أَنَّ المِقْدَادَ بْنَ عَمْرٍو الكِنْدِيَّ، حَلِيفَ بَنِي زُهْرَةَ، حَدَّثَهُ، وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَقِيتُ كَافِرًا فَاقْتَتَلْنَا، فَضَرَبَ يَدِي بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ، وَقَالَ: أَسْلَمْتُ لِلَّهِ، آقْتُلُهُ بَعْدَ أَنْ قَالَهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّهُ طَرَحَ إِحْدَى يَدَيَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا، آقْتُلُهُ؟ قَالَ: «لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَأَنْتَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.