பாடம் : 5
கல் அல்லது தடியால் (தாக்கிக்) கொலை செய்தால்…?15
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி (வீட்டிலிருந்து) புறப்பட்டாள். அப்போது அவளின் மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இன்னார் உன்னைத் தாக்கினாரா?’ என்று கேட்டார்கள். அவள் (இல்லை என்று) தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், ‘இன்னார் உன்னைத் தாக்கினாரா?’ என்று கேட்டார்கள். அவள் அப்போதும் (இல்லை என்று) சைகை செய்தாள். தொடர்ந்து (மூன்றாம் முறையாக) அவளிடம் அவர்கள் ‘இன்னாரா உன்னைத் தாக்கினார்?’ என்று கேட்டபோது அவள் (ஆம் என்று கூறும் விதமாக) தலையை கீழ் நோக்கித் தாழ்த்தி சைகை செய்தாள். எனவே, அந்த யூதனை அழைத்து வருமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவனை அழைத்து வந்து விசாரித்தபோது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.) எனவே, இரண்டு கற்களுக்கிடையில் வைத்து அவ(னது தலையி)னை நசுக்கிக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
Book : 87
(புகாரி: 6877)بَابُ إِذَا قَتَلَ بِحَجَرٍ أَوْ بِعَصًا
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسٍ، عَنْ جَدِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:
خَرَجَتْ جَارِيَةٌ عَلَيْهَا أَوْضَاحٌ بِالْمَدِينَةِ، قَالَ: فَرَمَاهَا يَهُودِيٌّ بِحَجَرٍ، قَالَ: فَجِيءَ بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِهَا رَمَقٌ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فُلاَنٌ قَتَلَكِ؟» فَرَفَعَتْ رَأْسَهَا، فَأَعَادَ عَلَيْهَا، قَالَ: «فُلاَنٌ قَتَلَكِ؟» فَرَفَعَتْ رَأْسَهَا، فَقَالَ لَهَا فِي الثَّالِثَةِ: «فُلاَنٌ قَتَلَكِ؟» فَخَفَضَتْ رَأْسَهَا، فَدَعَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَتَلَهُ بَيْنَ الحَجَرَيْنِ
சமீப விமர்சனங்கள்