தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6879

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

(கல்லால் அடித்துக் கொலை செய்தவனுக் குக்) கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுவது.

 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் (நசுக்கிக்) தாக்கினான். அவளுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் அச்சிறுமி கொண்டு வரப்பட்டாள். அப்போது (அவளிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரா உன்னைத் தாக்கினார்?’ என்று கேட்டார்கள். அவள் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். பிறகு இரண்டாவது முறை (வேறொரு நபர் குறித்து) நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது அப்போதும் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். மூன்றாம் முறை நபி (ஸல்) அவர்கள் (கொலையாளியின் பெயர் கூறி) அவளிடம் கேட்டபோது அவள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தாள். எனவே, இரண்டு கற்களுக்கிடையில் (அவன் தலையை வைத்து நசுக்கி) அவனைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.16

Book : 87

(புகாரி: 6879)

بَابُ مَنْ أَقَادَ بِالحَجَرِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،

أَنَّ يَهُودِيًّا قَتَلَ جَارِيَةً عَلَى أَوْضَاحٍ لَهَا، فَقَتَلَهَا بِحَجَرٍ، فَجِيءَ بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِهَا رَمَقٌ، فَقَالَ: «أَقَتَلَكِ فُلاَنٌ؟» فَأَشَارَتْ بِرَأْسِهَا: أَنْ لاَ، ثُمَّ قَالَ الثَّانِيَةَ، فَأَشَارَتْ بِرَأْسِهَا: أَنْ لاَ، ثُمَّ سَأَلَهَا الثَّالِثَةَ، فَأَشَارَتْ بِرَأْسِهَا: أَنْ نَعَمْ، فَقَتَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَجَرَيْنِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.