பாடம் : 14
ஆண்களாயினும் பெண்களாயினும் காயங்களுக்கும் தண்டனை உண்டு.22
பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படுவான் என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆணைக் கொன்றதற்குத் தண்டனையாகப் பெண் பழிவாங்கப்படுவாள். இது வேண்டுமென்றே நடந்த எல்லாக் கொலைகளுக்கும், கொலையை விடக் குறைவான காயங்களுக்கும் பொருந்தும் என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறியுள்ளனர். அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து இதையே அறிவித்துள்ளார்கள். ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) அவர் களுடைய சகோதரி ஓர் ஆணைக் காயப் படுத்திவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இதற்கும்) பழிவாங்கல் உண்டு என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்யப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். உடனே அவர்கள், ‘என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்’ என்று (சைகையால்) கூறினார்கள். அப்போது நாங்கள் ‘நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)’ என்று சொல்லிக் கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது ‘(என் வாயில் மருந்தூற்றவேண்டாம் என்று நான் தடுத்தும் நீங்கள் கேட்காததற்குப் பகரமாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் (இந்த வீட்டிலுள்ள) அனைவர் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்’ என்று கூறிவிட்டு, ‘ஆனால் அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், மருந்தூற்றும்போது உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை’ என்று கூறினார்கள். 23
Book : 87
(புகாரி: 6886)بَابُ القِصَاصِ بَيْنَ الرِّجَالِ وَالنِّسَاءِ فِي الجِرَاحَاتِ
وَقَالَ أَهْلُ العِلْمِ: يُقْتَلُ الرَّجُلُ بِالْمَرْأَةِ وَيُذْكَرُ عَنْ عُمَرَ: «تُقَادُ المَرْأَةُ مِنَ الرَّجُلِ، فِي كُلِّ عَمْدٍ يَبْلُغُ نَفْسَهُ فَمَا دُونَهَا مِنَ الجِرَاحِ» وَبِهِ قَالَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ، وَإِبْرَاهِيمُ، وَأَبُو الزِّنَادِ عَنْ أَصْحَابِهِ وَجَرَحَتْ أُخْتُ الرُّبَيِّعِ إِنْسَانًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «القِصَاصُ»
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:
لَدَدْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ، فَقَالَ: «لاَ تُلِدُّونِي» فَقُلْنَا: كَرَاهِيَةُ المَرِيضِ لِلدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ: «لاَ يَبْقَى أَحَدٌ مِنْكُمْ إِلَّا لُدَّ، غَيْرَ العَبَّاسِ، فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ»
சமீப விமர்சனங்கள்