தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6936

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

(தமது செயலுக்குத்) தகுந்த விளக்கம் அளிப்போர் குறித்து வந்துள்ளவை.22

 உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம் (ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்கான்’ எனும் (குர்ஆன்) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது, எனக்கு இறைத்தூதர் (ஸல்) ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக் கொண்டிருந்தார். உடனே தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை காத்திருந்தேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு ‘அவரின் மேல் துண்டை’ அல்லது ‘என்னுடைய மேல் துண்டைக்’ கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?’ என்று கேட்டேன். அவர் ‘இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாம் எனக்கு ஓதிக் காண்பித்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘நீர் பொய் சொல்லிவிட்டீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் ஓதிய இந்த அத்தியாயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (வேறு விதமாக) எனக்கு ஓதிக் காட்டினார்கள்’ என்றேன்.

பிறகு அவரை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துக் கொண்டு சென்று ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத பல (வட்டார) மொழி வழக்குகளில் ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். தாங்கள் எனக்கு ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை (வேறு விதமாக)ச் சொல்லிக் கொடுத்தீர்கள்’ என்று கூறினேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உமரே! இவரை விடுங்கள்’ என்று கூறிவிட்டு, ‘ஹிஷாமே! நீங்கள் ஓதுங்கள்!’ என்றார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இப்படித்தான் (இது) அருளப்பெற்றது’ என்று கூறினார்கள். பிறகு (என்னை நோக்கி) ‘உமரே! நீங்கள் ஓதுங்கள்’ என்றார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் ‘இப்படித்தான் (இது ) அருளப்பெற்றது. நிச்சயமாக இந்தக் குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது. எனவே, உங்களுக்கு அதில் எது சுலபமானதோ அதை ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.23

Book : 88

(புகாரி: 6936)

بَابُ مَا جَاءَ فِي المُتَأَوِّلِينَ

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ القَارِيَّ، أَخْبَرَاهُ: أَنَّهُمَا سَمِعَا عُمَرَ بْنَ الخَطَّابِ، يَقُولُ:

سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمٍ يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَؤُهَا عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ، فَانْتَظَرْتُهُ حَتَّى سَلَّمَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ أَوْ بِرِدَائِي، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ لَهُ: كَذَبْتَ، فَوَاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِي هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَؤُهَا، فَانْطَلَقْتُ أَقُودُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، وَأَنْتَ أَقْرَأْتَنِي سُورَةَ الفُرْقَانِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْسِلْهُ يَا عُمَرُ، اقْرَأْ يَا هِشَامُ» فَقَرَأَ عَلَيْهِ القِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَؤُهَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ يَا عُمَرُ» فَقَرَأْتُ، فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ» ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.