தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7153

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 சாலையில் தீர்ப்பு வழங்குவதும் மார்க்க விளக்கம் அளிப்பதும். (நீதிபதி) யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் சாலையில் தீர்ப்பளித்தார்கள். ஷஅபீ (ரஹ்) அவர்கள் தமது வீட்டின் வாசலில் தீர்ப்பளித்தார்கள்.

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நானும் நபி(ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாசலின் முற்றத்தருகே எங்களை ஒருவர் சந்தித்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமைநாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்து வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப் போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழுகையோ தானதர்மங்களோ செய்துவைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்’ என்று கூறினார்கள்.16

Book : 93

(புகாரி: 7153)

بَابُ القَضَاءِ وَالفُتْيَا فِي الطَّرِيقِ

وَقَضَى يَحْيَى بْنُ يَعْمَرَ فِي الطَّرِيقِ وَقَضَى الشَّعْبِيُّ عَلَى بَابِ دَارِهِ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَيْنَمَا أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَارِجَانِ مِنَ المَسْجِدِ، فَلَقِيَنَا رَجُلٌ عِنْدَ سُدَّةِ المَسْجِدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَعْدَدْتَ لَهَا؟»، فَكَأَنَّ الرَّجُلَ اسْتَكَانَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ ، مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صِيَامٍ، وَلاَ صَلاَةٍ، وَلاَ صَدَقَةٍ، وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.