தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7162

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 முத்திரையிடப்பெற்ற கடிதத்திற்கு (அது இன்னாரது கடிதம்தான் என்று) சாட்சிய மளிப்பதும், அதில் எது செல்லும்? அல்லது செல்லாது? என்பதும், ஆட்சியாளர் தம் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதமும், ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எழுதும் கடிதமும். (அறிஞர் பெரு)மக்களில் சிலர், குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் தவிர மற்ற விஷயங்களில் (நீதிபதிக்கு ஆலோசனை கூறி) ஆட்சியாளர் கடிதம் எழுதலாம் என்று கூறினர். பிறகு அவர்களே,தவறுதலாக நடந்துவிடும் கொலை விஷயத்தில் மட்டுமே (இப்படி ஆலோசனை கூறி ஆட்சியாளர் நீதிபதிக்குக்) கடிதம் எழுதுவது செல்லும் என்று கூறுகிறார்கள். ஏனெனில், இது அவர்களைப் பொறுத்த வரை (இழப்பீடு வழங்க வேண்டிய) பொருள் சம்பந்தப்பட்ட விஷயம்தான். (ஆனால், இந்தக் கருத்து தவறானதாகும்.) ஏனென்றால், இது பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாறுவ தெல்லாம் கொலை நிரூபணமான பின்புதான். ஆகவே, (ஆரம்பக் கட்டத்தில்,) தவறுதலாக நடந்த கொலையானாலும் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலையானாலும் இரண்டும் ஒன்றே. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குற்றவியல் தண்டனைகள் தொடர்பாகத் தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.25 உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களும் உடைக்கப்பட்ட ஒரு பல் தொடர்பான வழக்கில் (தனி மனிதரின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று) தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு நீதிபதி மற்றொரு நிதிபதிக்கு (ஆலோசனைகள் கூறி) கடிதம் எழுதுவது செல்லும்; எந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டதோ அவர் கடிதத்தையும் முத்திரையையும் (உண்மையானவை என) அறிந்திருந்தால் மட்டுமே செல்லும். ஷஅபீ (ரஹ்) அவர்கள் நீதிபதியிடமிருந்து தமக்கு வருகின்ற முத்திரையிடப்பட்ட கடிதத்தில் உள்ளவற்றை செயல்படுத்திவந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்படுகின்றது. முஆவியா பின் அப்தில் கரீம் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: நான் பஸ்ரா நீதிபதி அப்துல் ம-க் பின் யஅலா (ரஹ்) அவர்களையும், இயாஸ் பின் முஆவியா (ரஹ்), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்), பிலால் பின் அபீபுர்தா (ரஹ்), அப்துல்லாஹ் பின் புரைதா அல்அஸ்லமீ (ரஹ்), ஆமிர் பின் அபீதா (ரஹ்), அப்பாத் பின் மன்ஸூர் (ரஹ்) ஆகியோரைக் கண்டுள்ளேன். அவர்கள் சாட்சிகள் ஆஜராகாமலேயே நீதிபதிகளின் கடிதங்களை (விசாரணை முடிவுகளை) ஆதாரமாகக் கொள்ளலாம்’ என அனுமதித்துள்ளனர். இக்கடிதம் போ-யானது’ என யாருக்கெதி ராகக் கடிதம் வந்ததோ அவர் (-எதிரி) கூறினால், அதிலிருந்து வெளியேறும் வழியைப் பார்’என்று அவரிடம் சொல்லப் படும். இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களும் சவ்வார் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களும்தாம் முதன்முதலில் நீதிபதியின் கடிதத்திற்கு (-இது நீதிபதியின் கடிதம்தான் என்பதற்கு) ஆதாரத்தைக் கேட்டவர்களாவர். உபைதுல்லாஹ் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பஸ்ரா நீதிபதியான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து கடிதமொன்றைக் கொண்டுவந்தேன். நான் அன்னாரிடம் எனக்குக் கூஃபாவில் உள்ள இன்னார் இவ்வளவு தர வேண்டியுள்ளது என்று ஆதாராம் சமர்ப்பித்திருந்தேன். நான் அ(ந்தக் கடிதத்)தை (கூஃபா நீதிபதி) காசிம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அதை அவர்கள் செல்லுமென ஏற்றுக் கொண்டார்கள். ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களும் அபூகிலாபா (ரஹ்) அவர்களும், ஒருவர் எழுதிய மரண சாசனத்தில் என்ன உள்ளது என்பதை அறியாமல் அதற்கு சாட்சியம் அளிப்பதை வெறுத்துள்ளார்கள். ஏனெனில்,அதில் தவறு நடந்திருக்க இடமுண்டு; அது அவருக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்கள் கைபர்வாசிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் (உங்கள் பகுதியில் கொல்லப் பட்ட) உங்களுடைய தோழ(ர் அப்துல்லாஹ் பின் சஹ்ல் என்பவ)ருக்காக இழப்பீடு வழங்க வேண்டும்; அல்லது போருக்குத் தயாராக வேண்டும் என்று எழுதியிருந்தார்கள். திரைக்கப்பாலுள்ள பெண்ணுக்கெதி ராக சாட்சியம் அளிப்பது குறித்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறும் போது அவளை நீ அறிந்திருந்தால் சாட்சியம் அளிக்கலாம்; இல்லையேல் அளிக்க வேண்டாம்என்றார்கள்.

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுதவிரும்பியபோது மக்கள், ‘ரோமர்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை மட்டுமே படிப்பார்கள்’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை தயாரித்துக் கொண்டார்கள். அதன் மின்னும் வெண்மையை நான் (இன்னும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (இறைத்தூதர் முஹம்மத்) என இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.26

Book : 93

(புகாரி: 7162)

بَابُ الشَّهَادَةِ عَلَى الخَطِّ المَخْتُومِ، وَمَا يَجُوزُ مِنْ ذَلِكَ وَمَا يَضِيقُ عَلَيْهِمْ، وَكِتَابِ الحَاكِمِ إِلَى عَامِلِهِ وَالقَاضِي إِلَى القَاضِي

وَقَالَ بَعْضُ النَّاسِ: كِتَابُ الحَاكِمِ جَائِزٌ إِلَّا فِي الحُدُودِ، ثُمَّ قَالَ: إِنْ كَانَ القَتْلُ خَطَأً فَهُوَ جَائِزٌ، لِأَنَّ هَذَا مَالٌ بِزَعْمِهِ، وَإِنَّمَا صَارَ مَالًا بَعْدَ أَنْ ثَبَتَ القَتْلُ، فَالخَطَأُ وَالعَمْدُ وَاحِدٌ وَقَدْ كَتَبَ عُمَرُ إِلَى عَامِلِهِ فِي الجَارُودِ وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ فِي سِنٍّ كُسِرَتْ وَقَالَ إِبْرَاهِيمُ: كِتَابُ القَاضِي إِلَى القَاضِي جَائِزٌ إِذَا عَرَفَ الكِتَابَ وَالخَاتَمَ وَكَانَ الشَّعْبِيُّ يُجِيزُ الكِتَابَ المَخْتُومَ بِمَا فِيهِ مِنَ القَاضِي وَيُرْوَى عَنْ ابْنِ عُمَرَ نَحْوُهُ وَقَالَ مُعَاوِيَةُ بْنُ عَبْدِ الكَرِيمِ الثَّقَفِيُّ: شَهِدْتُ عَبْدَ المَلِكِ بْنَ يَعْلَى قَاضِيَ البَصْرَةِ، وَإِيَاسَ بْنَ مُعَاوِيَةَ، وَالحَسَنَ، وَثُمَامَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، وَبِلاَلَ بْنَ أَبِي بُرْدَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ الأَسْلَمِيَّ، وَعَامِرَ بْنَ عَبِيدَةَ، وَعَبَّادَ بْنَ مَنْصُورٍ، يُجِيزُونَ كُتُبَ القُضَاةِ بِغَيْرِ مَحْضَرٍ مِنَ الشُّهُودِ، فَإِنْ قَالَ: الَّذِي جِيءَ عَلَيْهِ بِالكِتَابِ: إِنَّهُ زُورٌ، قِيلَ لَهُ: اذْهَبْ فَالْتَمِسِ المَخْرَجَ مِنْ ذَلِكَ، وَأَوَّلُ مَنْ سَأَلَ عَلَى كِتَابِ القَاضِي البَيِّنَةَ ابْنُ [ص:67] أَبِي لَيْلَى، وَسَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحْرِزٍ: جِئْتُ بِكِتَابٍ مِنْ مُوسَى بْنِ أَنَسٍ قَاضِي البَصْرَةِ، وَأَقَمْتُ عِنْدَهُ البَيِّنَةَ: أَنَّ لِي عِنْدَ فُلاَنٍ كَذَا وَكَذَا، وَهُوَ بِالكُوفَةِ، وَجِئْتُ بِهِ القَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ فَأَجَازَهُ وَكَرِهَ الحَسَنُ، وَأَبُو قِلاَبَةَ: أَنْ يَشْهَدَ عَلَى وَصِيَّةٍ حَتَّى يَعْلَمَ مَا فِيهَا، لِأَنَّهُ لاَ يَدْرِي لَعَلَّ فِيهَا جَوْرًا وَقَدْ كَتَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِ خَيْبَرَ: «إِمَّا أَنْ تَدُوا صَاحِبَكُمْ، وَإِمَّا أَنْ تُؤْذِنُوا بِحَرْبٍ» وَقَالَ الزُّهْرِيُّ، فِي الشَّهَادَةِ عَلَى المَرْأَةِ مِنْ وَرَاءِ السِّتْرِ: «إِنْ عَرَفْتَهَا فَاشْهَدْ، وَإِلَّا فَلاَ تَشْهَدْ»

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

لَمَّا أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ، قَالُوا: إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلَّا مَخْتُومًا، ” فَاتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِهِ، وَنَقْشُهُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.