தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7186

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 ஆட்சித் தலைவரே மக்களுக்கு அவர் களுடைய செல்வங்களையும் அசையாச் சொத்துக்களையும் விற்றுக்கொடுப்பது.

நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரான) நுஐம் பின் நஹ்ஹாம் (ரலி) அவர்களால் பின்விடுதலை அளிக்கப்பட்ட ஓர் அடிமையை (-முதப்பரை அவருக்காக) விற்றுக்கொடுத்தார்கள்.51

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

தம் தோழர்களில் ஒருவர் ‘என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலையாவாய்’ என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை.

எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.52

Book : 93

(புகாரி: 7186)

بَابُ بَيْعِ الإِمَامِ عَلَى النَّاسِ أَمْوَالَهُمْ وَضِيَاعَهُمْ

وَقَدْ بَاعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدَبَّرًا مِنْ نُعَيْمِ بْنِ النَّحَّامِ

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ

«بَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِهِ أَعْتَقَ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ، لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرَهُ، فَبَاعَهُ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ، ثُمَّ أَرْسَلَ بِثَمَنِهِ إِلَيْهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.