தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7231

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 நபி (ஸல்) அவர்கள் இன்னின்னவாறு இருக்கக் கூடாதா? என்று (ஆதங்கப்பட்டுச்) சொன்னது.6

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒருநாள்), ‘என்னை இரவில் காவல் காப்பதற்கு என் தோழர்களில் ஏற்ற ஒருவர் வேண்டுமே?’ என்று கூறினார்கள், அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி(ஸல்) அவர்கள் ‘யார் அங்கே?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத், இறைத்தூதர் அவர்களே! தங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்’ என்று கூறினார்.

பிறகு நபி(ஸல்) அவர்கள், நாங்கள் அவர்களின் குறட்டைச் சப்தத்தை கேட்குமளவிற்கு (நிம்மதியாக) உறங்கினார்கள்.7

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

பிலால்(ரலி) அவர்கள் (மதீனாவில் காய்ச்சல் கண்டு நிவாரணமடைந்தபோது,)

‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்

‘ஜலீல்’ (கூரைப்) புல்லும்

என்னைச் சூழ்ந்திருக்க..

(மக்காவின்) பள்ளத்தாக்கில்

ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா?’

என்ற கவிதையைக் கூறினார்கள். அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.8

Book : 94

(புகாரி: 7231)

بَابُ قَوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْتَ كَذَا وَكَذَا»

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: أَرِقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَقَالَ

«لَيْتَ رَجُلًا صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ» إِذْ سَمِعْنَا صَوْتَ السِّلاَحِ، قَالَ: «مَنْ هَذَا؟»، قَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، جِئْتُ أَحْرُسُكَ، فَنَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سَمِعْنَا غَطِيطَهُ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَتْ عَائِشَةُ: قَالَ بِلاَلٌ:
[البحر الطويل]

«أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً … بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ»
، فَأَخْبَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.