பாடம் : 5 குர்ஆனையும் கல்வியறிவையும் பெறுவதற்கு ஆசைப்படுவது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படலாகாது: 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் அறிவை வழங்கினான். அவர் அதைக் காலையும் மாலையும் ஓதி வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், ‘இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன்’ என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார்.
2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர் ‘இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன்’ என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.9
…ஜரீர் இப்னு அப்தில் ஹமீத்(ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை குதைபா(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
Book : 94
(புகாரி: 7232)بَابُ تَمَنِّي القُرْآنِ وَالعِلْمِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لاَ تَحَاسُدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ القُرْآنَ، فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَارِ، يَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا يُنْفِقُهُ فِي حَقِّهِ فَيَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ ” حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ بِهَذَا
சமீப விமர்சனங்கள்