பாடம் : 2 நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை மட்டும் தனியாக ஒற்றராக அனுப்பிவைத்தது.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அக்ழ்ப்போர் நாளில் (எதிரிகளை வேவு பார்க்கச் செல்வதற்காக) மக்களை அழைத்தார்கள். ஸுபைர் இப்னு அல்அவ்வாம்(ரலி) அவர்கள் முன்வந்தார்கள். பிறகும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே மீண்டும் முன்வந்தார்கள். பிறகு மீண்டும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே (மறுபடியும்) முன் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய சிறப்பு உதவியாளர் ஸுபைராவார்’ என்றார்கள்.18
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை இப்னுல் முன்கதிர்(ரஹ்) அவர்களிடமிருந்து மனனம் செய்தேன். அன்னாரிடம் அய்யூப்(ரஹ்) அவர்கள் ‘அபூ பக்ரே! இவர்களுக்கு ஜாபிர்(ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவியுங்கள்; ஏனெனில் ஜாபிரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் அறிவிப்பது இவர்களைப் பரவசப்படுத்தும்’ என்று கூறினார்கள். உடனே அதே இடத்தில் ‘நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்; ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்’ என்று கூறி தொடர்ந்து பல ஹதீஸ்களை அன்னார் அறிவித்தார்கள்.
(மற்றோர் அறிவிப்பாளரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுப்யான்(ரஹ்) அவர்களிடம் ‘ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் ‘குறைழா போர் நாளில்’ என்று கூறினார்களே!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீங்கள் அமர்ந்திருந்தபோது அன்னார் ‘அகழ்ப்போர் நாளில்’ என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்’ என்றார்கள். மேலும், சுஃப்யான்(ரஹ்) அவர்கள் ‘இரண்டும் ஒரே நாள்தானே!’ என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார்கள்.
Book : 95
(புகாரி: 7261)بَابُ بَعْثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزُّبَيْرَ طَلِيعَةً وَحْدَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ المَدِينِيِّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ المُنْكَدِرِ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ
نَدَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ يَوْمَ الخَنْدَقِ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثَلاَثًا، فَقَالَ: «لِكُلِّ نَبِيٍّ حَوَارِيٌّ وَحَوَارِيَّ الزُّبَيْرُ» قَالَ سُفْيَانُ: حَفِظْتُهُ مِنْ ابْنِ المُنْكَدِرِ، وَقَالَ لَهُ أَيُّوبُ: يَا أَبَا بَكْرٍ، حَدِّثْهُمْ عَنْ جَابِرٍ، فَإِنَّ القَوْمَ يُعْجِبُهُمْ أَنْ تُحَدِّثَهُمْ عَنْ جَابِرٍ، فَقَالَ: فِي ذَلِكَ المَجْلِسِ: سَمِعْتُ جَابِرًا – فَتَابَعَ بَيْنَ أَحَادِيثَ سَمِعْتُ جَابِرًا – قُلْتُ لِسُفْيَانَ: فَإِنَّ الثَّوْرِيَّ يَقُولُ: يَوْمَ قُرَيْظَةَ، فَقَالَ: كَذَا حَفِظْتُهُ مِنْهُ، كَمَا أَنَّكَ جَالِسٌ، يَوْمَ الخَنْدَقِ، قَالَ سُفْيَانُ هُوَ يَوْمٌ وَاحِدٌ، وَتَبَسَّمَ سُفْيَانُ
சமீப விமர்சனங்கள்