பாடம் : 3 இறைத்தூதரின் வீடுகளில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர நுழையாதீர்கள் எனும் (33:53ஆவது) இறைவசனம். (உள்ளே செல்ல) ஒருவர் அனுமதியளித் தாலும் உள்ளே செல்லலாம்.
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் சென்றார்கள். (அதன்) வாயிற்கதவைப் பாதுகாக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் அனுமதி கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி அளியுங்கள். அவருக்கு சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி கூறுங்கள்’ என்றார்கள். அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்கள் தாம். பிறகு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவருக்கு சொர்க்கம் உண்டு என நற்செய்தியும் கூறுங்கள்’ என்றார்கள்.19
Book : 95
(புகாரி: 7262)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ} [الأحزاب: 53]
«فَإِذَا أَذِنَ لَهُ وَاحِدٌ جَازَ»
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي بِحِفْظِ البَابِ، فَجَاءَ رَجُلٌ يَسْتَأْذِنُ، فَقَالَ: «ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ»، فَإِذَا أَبُو بَكْرٍ، ثُمَّ جَاءَ عُمَرُ، فَقَالَ: «ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ»، ثُمَّ جَاءَ عُثْمَانُ، فَقَالَ: «ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ»
சமீப விமர்சனங்கள்