தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7303

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இறுதி நாள்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூ பக்ரிடம் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘நீங்கள் (தொழுகைக்காக) நிற்கும் இடத்தில் (என் தந்தை) அபூ பக்ர் நிற்பார்களானால், (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும்; எனவே, உமர்(ரலி) அவர்களிடம் கூறுங்கள்; அவர் தொழுகை நடத்தட்டும்’ என்று சொன்னேன். ஆனால் நபி(ஸல்) அவர்கள், ‘அபூ பக்ரிடம் சொல்லுங்கள்; மக்களுக்கு அவர் தொழுவிக்கட்டும்’ என்று கூறினார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ‘உங்களது இடத்தில் அபூபக்ர் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும். எனவே, மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி உமர்(ரலி) அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று சொல்’ என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே செய்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் தாம் யூசுஃப்(அலை) அவர்களுடைய தோழிகள் (போன்றவர்கள்). எனவே, மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூ பக்ரிடமே சொல்லுங்கள்’ என்றார்கள். அப்போது ஹஃப்ஸா(ரலி) அவர்கள் என்னிடம் ‘உன்னால் நான் நன்மை எதையும் கண்டதில்லை’ என்று கூறினார்.31

Book :96

(புகாரி: 7303)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أُمِّ المُؤْمِنِينَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ: «مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ»، قَالَتْ عَائِشَةُ: قُلْتُ: إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ»، فَقَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَفَعَلَتْ حَفْصَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ»، فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ: مَا كُنْتُ لِأُصِيبَ مِنْكِ خَيْرًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.